Home » Posts tagged with » Coimbatore

கோவை வராமல் செல்லும் ரயில்வே துறை அறிவிப்புக்கு எதிர்ப்பு!

ரயில்வே துறை வடமாநிலங்களில் இருந்து வரும் 6 ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையம் வராமல் கேரளாவிற்கு செல்லும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை வழியாக இயக்கப்படும் 6 ரயில்கள் இனி கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் கேரளா செல்வதற்கான பரிந்துரையால் பயணிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக தென்னக ரயில்வேக்கு அதிக வருவாய் தரும் ரயில் நிலையமாக கோவை மத்திய ரயில் நிலையம் உள்ளது. […]

கல்லூரி மாணவர் திடீர் மரணம்!

Comments Off on கல்லூரி மாணவர் திடீர் மரணம்!

நேற்றிரவு தனது நண்பர்களுடன் கல்லூரி மாணவர் ஒருவர் பரோட்டா சாப்பிட்டு விட்டு தூங்கினர். திடீரென அவர் இன்று காலை மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை சூலூர் பகுதி அருகே தனியார் கல்லூரியில் திருப்பூரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற 18 வயது மாணவர் படித்து வருகிறார். இன்று காலை அவர் திடீரென தனது அறையில் சடலமாக இருந்ததால் சக மாணவர்கள் கூட பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில் தூக்கத்திலேயே […]

Continue reading …

பிரபல நகைக்கடையில் நகை கொள்ளை!

Comments Off on பிரபல நகைக்கடையில் நகை கொள்ளை!

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் செயல்பட்டு வருகிறது. இக்கடையில் தினமும் ஏராளமானோர் வந்து நகைகளை வாங்கி சென்று வருகின்றனர். நேற்று வழக்கம் போல் கடையை மூடி சென்று இன்று காலை கடையை திறந்த போது நகைக்கடையில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைக்கண்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து […]

Continue reading …

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்!

Comments Off on கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்!

ஆணுக்குப் பெண் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த ஷர்மிளாதான். இவர் பேருந்தை அனாயசமாக வளைத்து ஓட்டுவதில் வல்லவர். காந்திபுரம் பேருந்து நிலையத்தின் புதிய ஸ்டார் ஆகிவிட்ட ஷர்மிளாவுடன் செல்பி எடுக்கவும் கூட்டம் அலைமோதுகிறது. இதுபற்றி ஷர்மிளா கூறும்போது, “எனது தந்தை ஓட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டிப்பார்த்ததேன். தந்தைக்கு துணையாகவும் ஆட்டோ ஓட்டியிருக்கேன். பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பது என்னுடைய கனவு. கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி […]

Continue reading …

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியரின் உதவி!

Comments Off on மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியரின் உதவி!

பூ வியாபாரம் செய்து வருபவர் கோவை புளியகுளம் அம்மன் குலத்தை சேர்ந்த ஜோதி. இவர் போலியோ நோயால் கால்கள் பாதிக்கப்பட்ட ஜோதி சக்கரப் பலகையில் அமர்ந்த படியே வாழ்க்கையை நடத்தி வருகிறார். நேற்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு சக்கர பலகையில் வந்து ஸ்கூட்டர் வழங்கி உதவிடுமாறு மனு அளித்தார். அந்த மனு உடனடியாக மாற்று திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மேலும் ஸ்கூட்டரை […]

Continue reading …

பிடிபட்டது மக்னா யானை!

Comments Off on பிடிபட்டது மக்னா யானை!

கோவையில் விவசாய பகுதிகளில் ஆட்டம் காட்டி வந்த ஒற்றை காட்டு யானை பிடிபட்ட நிலையில் அதை வனப்பகுதியில் விடுவதில் பிரச்சினை எழுந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வனப்பகுதிகள் என்பதால் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சிலசமயம் யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்து விடுவதும், பின்னர் அவை காட்டுக்குள் விரட்டியடிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில் மக்னா யானை ஒன்று விவசாய பகுதிகளில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. அதை காட்டுக்குள் விரட்ட […]

Continue reading …

நிதி நிறுவன இயக்குனர் தற்கொலை!

Comments Off on நிதி நிறுவன இயக்குனர் தற்கொலை!

நிதிநிறுவன இயக்குனர் ஒருவர் ரூபாய் 100 கோடி மோசடி வழக்கில் கைதானதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் சதீஷ்குமார் என்பவர் நிதிநிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டப்பட்டது. இதனை அடுத்து சதீஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில் மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் […]

Continue reading …

விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது!

Comments Off on விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது!
விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது!

சமீபத்தில் தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் என்ற பகுதியில் உள்ள விவசாய நிலங்களைக் கையகப்படுத்தித் தொழில்பூங்கா அமைப்பதற்கு அரசாணை பிறப்பித்தது. இதற்கு எதிராக விவசாயிகள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இன்று தமிழக அரசு, இந்த அரசாணையை ரத்து செய்வதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் மற்றும் கல்வி துறைகளில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி, பல முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் […]

Continue reading …

பலியான முபின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு!

Comments Off on பலியான முபின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு!

கோவை மாநகரில் கார் வெடித்த சம்பவத்தில் சதி முயற்சி செய்ததாக இறந்த முபின் உடலை அடக்கம் செய்வதற்கு அனைத்து ஜமாத்துகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர். கோவை மாநகரின் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று முன்தினம் அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற நபர் உடல் சிதறி பலியானார். இந்த விபத்து குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவைக்கு நேரடியாக சென்று […]

Continue reading …

கோவை, திருப்பூரில் ஆ.ராசாவை கண்டித்து போராட்டம்!

Comments Off on கோவை, திருப்பூரில் ஆ.ராசாவை கண்டித்து போராட்டம்!

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் இந்து முன்னணியினர் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எம்.பி ஆ.ராசா சமீபத்தில் இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது பேச்சு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் இந்த பேச்சு இந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதாக இந்து மத அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. ஆ.ராசா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என […]

Continue reading …
Page 1 of 41234