Home » Posts tagged with » Congress (Page 2)

மயிலாடுதுறைக்கு வேட்பாளர் யார்? அதிருப்தியில் திமுக!

Comments Off on மயிலாடுதுறைக்கு வேட்பாளர் யார்? அதிருப்தியில் திமுக!

வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதிக்கு இன்னும் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் இருப்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மட்டுமின்றி திமுகவுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புதுவையை சேர்த்து 10 தொகுதிகள் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதுவரை 9 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் அப்பகுதியில் […]

Continue reading …

பாஜக தோல்வியை தழுவும்; மல்லிகார்ஜூன காக்கே!

Comments Off on பாஜக தோல்வியை தழுவும்; மல்லிகார்ஜூன காக்கே!

ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 18வது மக்களவை தேர்தல் வரும் 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும், பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது. தேர்தலுக்காக அனைத்து கட்சிகளுக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் […]

Continue reading …

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளா?

Comments Off on காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளா?

காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆறு முதல் எட்டு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று பிடிவாதமாக இருந்தது. திடீரென பத்து தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது திமுகவின் மேலிட வட்டாரத்திற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரமுகர்கள் சிலர் 10 தொகுதிகள் தராவிட்டால் புது ரூட் போட்டு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மேல் இடத்தில் சொன்னதாகவும் அதற்கு மேலிடமும் பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்து கொண்ட திமுக, அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் […]

Continue reading …

இண்டி கூட்டணி குறித்து ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் விமர்சனம்!

Comments Off on இண்டி கூட்டணி குறித்து ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் விமர்சனம்!

ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் என்பவர் அனைத்து திருடர்களும் ஒன்று கூடி உருவாக்கிய கூட்டணி தான் இண்டி கூட்டணி என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இண்டி கூட்டணி பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்த நிலையில் அக்கூட்டணிக்குள் பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் மம்தா பானர்ஜி தன்னிச்சையாக மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். காங்கிரஸ் கட்சியை அவர் ஒரு பொருட்டாக கண்டு கொள்ளவில்லை. […]

Continue reading …

தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பின் நிலவரம் என்ன?

Comments Off on தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பின் நிலவரம் என்ன?

இந்தியா டிவி கருத்துக்கணிப்பில் வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் அதேபோல் 100 தொகுதிகளையும் கூட இந்தியா கூட்டணி வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதில் இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் இணைந்து எடுத்த கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 543 இடங்களில் 378 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் […]

Continue reading …

ஸ்ரீபெரும்புதூர் ராகுல் காந்தி போட்டியா?

Comments Off on ஸ்ரீபெரும்புதூர் ராகுல் காந்தி போட்டியா?

வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் அல்லது புதுவையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையையும் தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தையும் நடத்தி வருகின்றன. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் வயநாடு […]

Continue reading …

உடைகிறதா திமுக காங்கிரஸ் கூட்டணி?

Comments Off on உடைகிறதா திமுக காங்கிரஸ் கூட்டணி?

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் திமுக உடனான கூட்டணியில் விரைவில் தொகுதி பங்கீடு முடியும், தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். விரைவில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் […]

Continue reading …

பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

Comments Off on பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

காங்கிரஸ் கட்சியினர் மீனவர்கள் கைது விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து பழவேற்காடு ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நிளி Go Back Modi என முழக்கமிட்டனர். ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதை கண்டித்தும், தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு நாள் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு […]

Continue reading …