
தனது பெயருக்கு சொத்துக்களை மாற்றி எழுதி தராததால் மகனே தாயை அடித்து கொன்றுள்ளார். கர்நாடகாவின் தார்வாயைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி சாரதா பஜந்திக்கு ராஜேந்திரா என்ற 40 வயது மகன் உள்ளார். சாரதா பெயரில் சில சொத்துக்கள் உள்ள நிலையில், அவர் கணவரை இழந்தவர் என்பதால் விதவைகள் உதவித் தொகையும் அவருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. ராஜேந்திரா இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததோடு தாயாரின் உதவித்தொகையையும் பிடுங்கி வைத்துக் கொண்டு செலவு செய்து வந்துள்ளார். […]
Continue reading …
துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி நடத்திய ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்துள்ளனர். நம் தமிழ் இசையமைப்பாளர்கள் நாடு கடந்து சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் சினிமாவின் மேன்மையை உயர்த்திப் பிடித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அயல்நாடு வாழ் தமிழர்கள் நம் தமிழ் பாடல்களுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருவதுடன், பலரும் தங்களைச் சிறந்த பாடகர்களாக உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி […]
Continue reading …
சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது மீண்டும் சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று முதுல் 12ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியுள்ளது. இன்று முதல் 11-ம் வகுப்புகளுக்கும் தொடங்க உள்ளது. சென்னை கெருகம்பாக்கதில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மாணவர்களை வீட்டுக்கு […]
Continue reading …
அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக பக்கம் வரலாம் என்று காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய வைகை செல்வன், “அதிமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் நல்ல முறையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று நாட்களில் நல்ல பதில் தரப்படும். தொகுதி பங்கீடுவதில் காங்கிரஸுடன் திமுகவுக்கு கசப்பு உள்ளது. காங்கிரசுக்கு போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை, பேச்சுவார்த்தையில் காங்கிரஸ், […]
Continue reading …
உச்சநீதிமன்றம் லஞ்ச வழக்குகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு விதிவிலக்கில்லை என்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் என தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு லஞ்சம் வாங்குபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊழல் அல்லது லஞ்சம் பொது வாழ்க்கையில் நேர்மையை அழிக்கிறது என்று கூறிய உச்சநீதிமன்றம் லஞ்சம் வாங்குவதே குற்றமாகும் […]
Continue reading …
சமீபத்தில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய “அனிமல்” திரைப்படம் ரிலீசானது. படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். “அனிமல்” படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ஆணாதிக்கத்தை தன் படங்களில் பெருமையான விஷயமாக காட்டுகிறார் […]
Continue reading …
தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் நடிகர் அர்ஜுன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். அவர் சில படங்களை இயக்கியும் உள்ளார். தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்த ஒரு படத்தை இயக்க ஆயத்தமானார். ஆனால் அந்த படத்தின் கதாநாயகனுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் தொடங்கப்படவில்லை. இப்போது அதே படத்தை உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சனைக் கதாநாயகனாக்கி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் […]
Continue reading …
தேர்தல் ஆணையர் பொன்முடி தொகுதி குறித்து சபாநாயகரிடம் இருந்த எந்த தகவலும் வரவில்லை: என்று கூறியுள்ளார். நீதிமன்றத்தால் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவருடைய அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது என செய்திகள் வெளியானது. ஆனால் இன்னும் சபாநாயகரிடமிருந்து முறையாக பொன்முடி போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதி காலி என்று அறிவிக்கப்படவில்லை. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து சபாநாயகரிடம் […]
Continue reading …
சமீபத்தில் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். தற்போது கரூர் மாவட்ட செயலாளர் பதவியும் பறிபோக இருப்பதாக திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டது. இதன் காரணமாக இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த […]
Continue reading …
போலீசார் சிறை கைதி உள்ளிட்ட நான்கு பேரிடம் பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று பெங்களூரு ஒயிட்பீல்டு ராமேஸ்வரம் கஃபேவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் உணவக பணியாளர்கள் இருவர் உட்பட 10 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டை வைத்தவர் என சந்தேகிக்கப்படும் நபரின் நடமாட்டம் […]
Continue reading …