Home » Posts tagged with » Netrikkan (Page 108)

கமல் படத்திதிருந்து விலகுகிறாரா துல்கர் சல்மான்?

Comments Off on கமல் படத்திதிருந்து விலகுகிறாரா துல்கர் சல்மான்?

சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் ‘தக் லைஃப்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் புரொமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரலானது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கடந்த மாதம் செர்பியாவில் ஷூட்டிங் நடந்தது. இப்போது சென்னையில் […]

Continue reading …

கமல் சாரை பாக்க கோரிக்கை வைத்த ரியல் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’!

Comments Off on கமல் சாரை பாக்க கோரிக்கை வைத்த ரியல் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’!

“மஞ்சும்மள் பாய்ஸ்” மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய பெற்றி பெற்றுள்ளது. படத்தின் உண்மை சம்பவத்தில் இருந்தவர்கள் கமல்ஹாசனை நேரில் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 2006ல் கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு சென்ற மலையாள இளைஞர்களில் ஒருவர் அங்கிருந்த பெரும் பள்ளம் ஒன்றில் விழுந்து விட அவர்களது நண்பர்கள் அவரை எப்படி காப்பாற்றினார்கள் என்ற உண்மைக் கதையை மையப்படுத்தி வெளியான படம் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. கேரளா, தமிழ்நாடு முழுவதும் ஹிட் அடித்துள்ள இந்த படம் கேரளாவில் டாப் ஸ்டார் படங்களுக்கு […]

Continue reading …

சாதனை செய்த “மஞ்சும்மள் பாய்ஸ்!”

Comments Off on சாதனை செய்த “மஞ்சும்மள் பாய்ஸ்!”

“மஞ்சும்மள் பாய்ஸ்” கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான மலையாள திரைப்படம். கேரளாவை தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது இத்திரைப்படம். படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் “குணா” திரைப்படத்தில் இடம்பெற்ற “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம்” பாடல் […]

Continue reading …

குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சென்னையில் என்.ஐ.ஏ சோதனை!

Comments Off on குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சென்னையில் என்.ஐ.ஏ சோதனை!

கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக சென்னை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்திய குற்றவாளி தமிழகத்தில் பதுங்கி இருக்கலாம் என்று வெளியான தகவலை அடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகத்தில் சோதனை செய்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் திடீரென வெடித்த வெடிகுண்டு காரணமாக 10 பேர் காயமடைந்தனர். […]

Continue reading …

மனைவியை நினைத்து மேடையில் அழுத அமைச்சர்!

Comments Off on மனைவியை நினைத்து மேடையில் அழுத அமைச்சர்!

அமைச்சர் சி.வெ.கணேசன் கணவனை இழந்த தாய்மார்களுக்கு 2000 தையல் மிஷின் இயந்திரம் வழங்கினார். என்எல்சி இந்தியன் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் சி எஸ் ஆர் நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் தனியார் பள்ளி வளாகத்தில் 2000 கணவனை இழந்த தாய்மார்களுக்கு இலவச மோட்டார் உடன் கூடிய தையல் மிஷின் இயந்திரத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். விழாவில் அவர், தன் மனைவியை நினைத்து குலுங்கி குலுங்கி […]

Continue reading …

கருக்கலைப்பு உரிமை சட்டத்தை நிறைவேற்றிய பிரான்ஸ்!

Comments Off on கருக்கலைப்பு உரிமை சட்டத்தை நிறைவேற்றிய பிரான்ஸ்!

பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 1975ம் ஆண்டு முதல் பிரான்ஸில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக உள்ளது. கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக மாற்றும் வகையில் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 780 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை பதிவு செய்த நாடாக பிரான்ஸ் […]

Continue reading …

சத்யராஜ் மகளுக்கு வலைவிரித்ததா பாஜக?

Comments Off on சத்யராஜ் மகளுக்கு வலைவிரித்ததா பாஜக?

ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வரும் பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் “மகிழ்மதி இயக்கம்” என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைந்த மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அளித்து வருவதாக தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு அரசியலிலும் ஆர்வம் உள்ளதாகக் கூறியுள்ள அவர் கட்சி ஒன்றில் சேரப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை எந்த கட்சியிலும் அவர் சேரவில்லை. அவரை பாஜக தங்கள் கட்சியின் சார்பாக கொங்கு மண்டலத்தில் எதாவது ஒரு […]

Continue reading …

டி.என்.பி.எ.சி அறிவிப்பு..!

Comments Off on டி.என்.பி.எ.சி அறிவிப்பு..!

தேர்வாணையம் இன்று முதல் டி.என்.பி.எ.சி குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பம் செய்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வேண்டிய நிலை இருந்தால் திருத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் குரூப்-4 தேர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மார்ச் 4 முதல் 6ம் தேதி வரை திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் 6244 காலி பணி இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. ஜனவரி 30ம் தேதி விண்ணப்பம் தொடங்கி பிப்ரவரி 28ம் […]

Continue reading …

பாஜகவுக்கு பிரதமர் மோடி கொடுத்த தேர்தல் நிதி எவ்வளவு?

Comments Off on பாஜகவுக்கு பிரதமர் மோடி கொடுத்த தேர்தல் நிதி எவ்வளவு?

பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் நிதியாக பிரதமர் மோடி 2000 ரூபாய் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரம் நெருங்கிவிட்டால் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூல் செய்து அந்த பணத்தை வைத்து தான் தேர்தல் செலவு செய்கிறது. பாரதிய ஜனதா கட்சி நன்கொடையை தொடங்கியுள்ளது. அதற்காக நமோ என்ற செயலியை உருவாக்கி அதன் மூலம் நன்கொடை பெற்று வருகிறது. இந்த செயலியில் பிரதமர் மோடி முதல் நபராக 2000 ரூபாய் பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக அளித்துள்ளதாக […]

Continue reading …

ஸ்ரீபெரும்புதூர் ராகுல் காந்தி போட்டியா?

Comments Off on ஸ்ரீபெரும்புதூர் ராகுல் காந்தி போட்டியா?

வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் அல்லது புதுவையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையையும் தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தையும் நடத்தி வருகின்றன. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் வயநாடு […]

Continue reading …