
இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிலாவுக்கு செல்லாத குறையை போக்கியுள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்று நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் வணிக நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. ஹூஸ்டனை தளமாகக் கொண்ட இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் அதன் ஒடிசியஸ் ரோபோவை நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறக்கியுள்ளது. விண்கலம் தற்காலிகமாக செயலிழந்ததை கண்டுபிடிக்க சில நிமிடங்கள் ஆனதாகவும், ஆனால், சிறிது நேரத்தில், அது சரி செய்யப்பட்டு, சமிக்ஞைகள் கொடுக்கத் தொடங்கியதாகவும் அந்நிறுவனம் […]
Continue reading …
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த “கான்ஜூரிங் கண்ணப்பன்” திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடித்தார். இந்த படம் கடந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்துக்குப் பிறகு சதீஷ் ஹீரோவாக மற்றொரு திகில் மற்றும் காமெடி திரைப்படமான “ஓ மை கோஸ்ட்” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுக்கு அடுத்து அவர் இப்போது “வித்தைக்காரன்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்துக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை. […]
Continue reading …
கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் “யோகன் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பின் இதே கதையை வருண் என்ற அறிமுக நடிகரின் நடிப்பில் “ஜோஸ்வா இமைபோல் காக்க” என்ற பெயரில் கௌதம் மேனன் சில ஆண்டுகளுக்கு முன்பே இயக்கி முடித்தார். ஆனால் படம் சில ஆண்டுகளாக ரிலீசாகாமல் முடங்கிக் கிடந்தது. இதையடுத்து மார்ச் 1ம் தேதி இந்த படம் […]
Continue reading …
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், தற்போது The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர்களின் […]
Continue reading …
மழை காலம் மற்றும் குளிர்கால முடிவடைந்து தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரண்டு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் […]
Continue reading …
எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்து பாடம் படித்தவர். தேர்தல் நேரத்தில் எப்படி எல்லாம் அரசியல் யுக்திகளை கையாண்டு வெற்றி பெற வேண்டும் என்று அவருக்கு மட்டுமே தெரியும் என அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி கூறியுள்ளார். இன்று அதிமுக மகளிர் அணி செயலாளர் வளர்மதி செய்தியாளர்களிடம், “தேர்தல் தொடர்பாக அறிவுபூர்வமாக சிந்தித்து முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறந்த முடிவை எடுப்பார். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எம்ஜிஆர் மற்றும் […]
Continue reading …
தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எப்படி ரிட் தாக்கல் செய்ய முடியும்? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமா? என கேள்வி நீதிபதிகள் எழுப்பினர். இந்த விசாரணையில் மாவட்ட ஆட்சியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல, விசாரணைக்காக மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டது என அமலாக்கத்துறை வாதம் செய்தது. ரிட் தாக்கல் செய்ய […]
Continue reading …
சென்னையில் உள்ள அனைவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது 6000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பலருக்கு 6 ஆயிரம் ரூபாய் சென்று சேரவில்லை என சென்னை மக்கள் புலம்பி வருகின்றனர். சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக ஏராளமானோர் தங்களது உடைமைகளை இழந்தனர். இதையடுத்து வெள்ள நிவாரணமாக சென்னையில் உள்ள […]
Continue reading …
போலீசார் திருவள்ளூர் அருகே வாகனத்தில் கடத்தி வந்த 205 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். செவ்வாப்பேட்டை போலீசாருக்கு திருவள்ளுர் அடுத்த காக்களூர் பகுதியில் வாகனத்தில் கடத்தி வந்த குட்கா பொருட்களை மற்றொரு வாகனத்தில் மாற்றப்பட்டு திருநின்றவூர் நோக்கி கொண்டு செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து செவ்வாப்பேட்டை தனிப்படை போலீசார் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து துரத்தி சென்று பிடித்து, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது வாகனத்தில் […]
Continue reading …
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் சர்வதேச, தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்க தொகைக்கான காசோலை மற்றும் 3 சதவீத விளையாட்டு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கு கீழ் 4 வீராங்கனைகளுக்கு அரசு பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி […]
Continue reading …