
இன்று சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களாக சிறையில் உள்ளார். ஆனால் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா […]
Continue reading …
நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை நடத்த அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்தேன். இந்த விளையாட்டுப் போட்டி துவக்க விழாவுக்கு வருகை தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து அழைப்பிதழை தந்தேன். முதலமைச்சரின் சார்பில் வழங்கப்பட்ட அழைப்பு கடிதத்தையும் பிரதமரிடம் கொடுத்தேன். திருச்சியில் நடந்த விழாவின்போது முதலமைச்சர் வைத்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் […]
Continue reading …
“அயலான்” திரைப்படம் இதுவரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு இல்லாத அளவுக்கு திரையரங்க உரிமை விலைபோனது. ரவிகுமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னை தாஜ் கோரமண்டல் […]
Continue reading …
நடிகை அமலா பால் “சிந்து சமவெளி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். இவர் “மைனா” படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவரானார். இடையில் அவர் திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் செய்தார். தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் இப்போது முன்புபோல […]
Continue reading …
“ராக்கி” மற்றும் “சாணி காகிதம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்து தனது மூன்றாவது படமான “கேப்டன் மில்லர்” படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி ரிலீசாகவுள்ளது. நேற்று இத்திரைப்படத்தின் […]
Continue reading …
அங்கன்வாடி ஒன்றில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு சிறுமி, அங்கன்வாடி பணியாளர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். மதுரை முத்துப்பட்டியில், அங்கன்வாடி மையத்தில் மொத்தம் 23 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இன்று 13 குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்திருந்தனர். இன்று காலை திடீரென அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு குழந்தைகள் மற்றும் 47வயது மதிக்கதக்க ஒரு அங்கன்வாடி பணியாளர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைக்கு […]
Continue reading …
எண்ணெய் டேங்கர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர். லாரியின் டயர் வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் டிவைடரில் மோதி, பக்கவாட்டில் கவிழ்ந்து தீப்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கன்னாவில் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட விபத்தில் எண்ணெய் டேங்கர் லாரி தீப்பிடித்தது. இவ்விபத்தில் டேங்கர் லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. ஆனால் லாரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் எவ்வித காயமும் […]
Continue reading …
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திமுகவுக்கு கெடுவிதித்துள்ளார். இதுகுறித்து அவர் “தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரி நடத்தும் சமூகக் கல்லூரியை மேயர் மற்றும் துணை மேயரின் ஒப்புதல் இல்லாமல் அத்துமீறி சீல் வைத்துடன் இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் எம் யாக்கூபை ஒருமையில் திட்டிய மாநகராட்சி ஆணையாளர் அழகு […]
Continue reading …
டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலின் போது எனது பிரச்சாரத்தை தடுக்கவே கைது நடவடிக்கை எடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அமலாக்கத்துறை டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கெஜ்ரிவால் கூறும்போது, “பாஜக என்னை கைது செய்ய விரும்புவது நேர்மையை கைது செய்ய விரும்புவதற்கு சமம், எனது மிகப்பெரிய சொத்து நேர்மை தான். அதை அவர்கள் கெடுக்க விரும்புகிறார்கள், எனக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானவை என […]
Continue reading …
வியாபாரி ஒருவர் சில நாட்களுக்கு முன் சென்னையில் மரணமடைந்த வழக்கு குறித்த விசாரணையில் அது விபத்து அல்ல கொலை என்று தெரிய வந்துள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த 37 வயதான பிரேம்குமார் பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி சன்பிரியா. நேற்று முன் தினம் இரவு கடையை பூட்டிவிட்டு பிரேம்குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். போலீசார் வழக்குப்பதிவு […]
Continue reading …