Home » Posts tagged with » Netrikkan (Page 161)

அரசுக்கு புகழாரம் சூட்டும் நடிகர் வடிவேலு!

Comments Off on அரசுக்கு புகழாரம் சூட்டும் நடிகர் வடிவேலு!

நடிகர் வடிவேலு “திட்டுபவர் திட்டட்டும் அரசு தன் கடமையை சிறப்பாக செய்கிறது” புகழாரம் சூட்டுகிறார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் பசுமை சைதை திட்டத்தின் கீழ் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் வீழ்ந்த மரங்களை ஈடு செய்யும் வகையில் சைதாப்பேட்டை தொகுயில் 5000 மரங்களை நடும் நிகழ்வு சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்து கொண்டு மரத்தினை நட்டு துவக்கி வைத்து பேசியபோது, “தமிழ்நாடு அரசு பல சோதனைகளை சந்திக்கிறது எனவும் சென்னையில் […]

Continue reading …

டொனால்டு டிரம்ப் குறித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Comments Off on டொனால்டு டிரம்ப் குறித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட தகுதியற்றவர் என்று கொலராடோ மாகாண நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. டொனால்டு டிரம்ப் 2021-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வியை அவர் ஏற்க மறுத்த நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் டிரம்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் […]

Continue reading …

பாஜக வேட்பாளராக களமிறங்கும் முன்னணி நடிகை

Comments Off on பாஜக வேட்பாளராக களமிறங்கும் முன்னணி நடிகை

நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் சினிமாவின் முன்னணியில் உள்ளவர். இவர் “பேஷன்,” “குயின்,” “தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்,” “ஜான்சி ராணி,” தமிழில் “தலைவி” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். “சந்திரமுகி 2” திரைப்படத்தில் சமீபத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து மாதவனுடன் அவர் இணைந்து நடிக்கும் புதிய படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சமீப காலமாகவே பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வரும் நடிகை கங்கனா ரனாவத், பாஜகவுக்கு ஆதரவாளராக இருந்து வருவதாகவும் […]

Continue reading …

பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா?

Comments Off on பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா?

அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை குறித்த விவரங்கள் நாளை வெளியாக உள்ள நிலையில் அமைச்சர் பதவியை பொன்முடி ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சியில் கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி மீதும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த […]

Continue reading …

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து அமைச்சர் மனோதங்கராஜ்

Comments Off on எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து அமைச்சர் மனோதங்கராஜ்

அமைச்சர் மனோ தங்கராஜ் 141 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்த பாஜக அரசின் முடிவு வெறும் அரசியல் நடவடிக்கை அல்ல; இது இந்திய ஜனநாயகத்தை கொல்லும் தீவிர முயற்சி என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மனோ தங்கராஜ், “141 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்த பாஜக அரசின் முடிவு வெறும் அரசியல் நடவடிக்கை அல்ல; இது இந்திய ஜனநாயகத்தை கொல்லும் தீவிர முயற்சி. இந்த எம்.பி.க்கள் கோடிக்கணக்கான மக்களையும் அவர்களின் குரல்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். அவர்களை இடைநீக்கம் செய்வது என்பது அம்மக்களின் விருப்பத்தையும் […]

Continue reading …

அமைச்சர் பொன்முடி குறித்து அதிமுக வாய் திறக்காதது ஏன்?

Comments Off on அமைச்சர் பொன்முடி குறித்து அதிமுக வாய் திறக்காதது ஏன்?

சமீபத்தில் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. அவர் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை காலை 10:30 மணிக்கு அவரது தண்டனை குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்தால் அமைச்சர் பதவி பறிபோகும். அமைச்சர் பொன்முடி தீர்ப்பு குறித்து பாஜக உட்பட ஒரு சில கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறது. ஆனால், அதிமுகவை சேர்ந்த யாருமே விமர்சனம் செய்யாமல் அமைதியாக உள்ளனர். இது குறித்து […]

Continue reading …

லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

Comments Off on லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் மாநில எல்லைகளில் உள்ள அனைத்து ஆர்டிஓ சோதனை சாவடிகள் மற்றும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் அளித்த பேட்டியில், “இந்தியா முழுக்க உள்ள சோதனைச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்று மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். 16 மாநிலங்களில் இந்த சோதனை சாவடிகள் எடுக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் உள்ள […]

Continue reading …

தேவிபாரதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த கமல்ஹாசன்

Comments Off on தேவிபாரதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த கமல்ஹாசன்

எழுத்தாளர் தேவிபாரதி தமிழுக்கான இவ்வாண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார். அவருக்கு உலக நாயகன் கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச்செய்தியில், “நாற்பத்து நான்கு ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் செயல்பட்டு கொண்டிருக்கும் அவருக்கு இந்த கௌரவம் மிகவும் பொருத்தமானது. தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தின் நுணுக்கமான விவரங்களை, கலாப்பூர்வமாகவும் நுட்பமாகவும் சித்திரிக்கும் இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார் தேவிபாரதி. சிறுகதைகளில் சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய தேவிபாரதி, நாவல் பக்கம் திரும்பி, அந்த எழுத்திலும் தன் முத்திரையைப் […]

Continue reading …

நிதிஷ்குமார் பேச்சு குறித்து பாஜக கேள்வி!

Comments Off on நிதிஷ்குமார் பேச்சு குறித்து பாஜக கேள்வி!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், நேற்றைய இந்தியா கூட்டணியில் “ஹிந்தி ஒரு தேசிய மொழி, அதை திமுகவினர் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக நிதிஷ்குமார் பேச்சுக்கு அமைதியாக இருந்தது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. பாஜகவின் முக்கிய பிரமுகருமான நாராயணன் திருப்பதி இது குறித்து கூறும்போது, “ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்கிறார் INDI கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார். ஹிந்தியை தூக்கிப்பிடித்தும், மற்ற மொழிகளை அவமானப்படுத்தியும் அந்த கூட்டத்தில் […]

Continue reading …

சென்னை அண்ணாசாலையில் ஏற்பட்ட பள்ளம்!

Comments Off on சென்னை அண்ணாசாலையில் ஏற்பட்ட பள்ளம்!

திடீரென சென்னை அண்ணா சாலையில் உள்ள கேசினோ தியேட்டர் அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது சென்னையில் உள்ள பல இடங்களில் திடீரென பள்ளம் ஏற்பட்டு பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது. சென்னை அண்ணா சாலையில் ஏற்கனவே சில முறை பள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மயிலாப்பூரில் பள்ளம் ஏற்பட்டது. சென்னை அண்ணா சாலையிலுள்ள காசினோ திரையரங்கம் அருகே திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டது. தற்சமயம் பள்ளத்தை […]

Continue reading …