
பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக பணிபுரிந்த நிலையில் தற்போது அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்துவிட்டார். பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித்துறை பொறுப்பு யாருக்கு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தற்போது வந்துள்ள தகவலின் படி பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷுக்கு கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக வட்டாரங்களில் இது குறித்து கூறப்படும் நிலையில் […]
Continue reading …
அயோத்தியில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பல முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனியா காந்தி உட்பட எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் பிரமுகர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், பகுஜன் […]
Continue reading …
பொன்முடி வழக்கறிஞர் “அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர் நீதிபதி ஜெயச்சந்திரன்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர் சந்திப்பில் “நீதிபதி ஜெயச்சந்திரன் அப்பழுக்கற்றவர், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்துள்ளார். பொன்முடி வழக்கில் சொத்துகள் முடக்கும் கோப்புகளை கையாண்டுள்ளார். இதனை Latent Bias என சட்ட முறையில் கூறுவார்கள். இதை நாங்கள் நீதிபதியிடமே எடுத்துச் சொன்னோம். “நீங்கள் அப்போதே சொல்லியிருந்தால் கூட நான் வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன்” என […]
Continue reading …
அமைச்சராக இருந்த பொன்முடி 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் தனது எம்எல்ஏ பதவியை இழந்தார். இத்தீர்ப்பு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்து இன்னும் நான்கு அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கீதா ஜீவன், தங்கம் தென்னரசு மற்றும் மீண்டும் பொன்முடி அவர்கள் மீதுள்ள அமலாக்கத்துறை வழக்கு என நான்கு வழக்குகளுக்கு விரைவில் தீர்ப்பு வரும். அப்போது யார் யார் அமைச்சர் பதவியை இழப்பார்கள் என்பதும் தெரியவரும். இந்தியாவிலேயே […]
Continue reading …
அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இன்று காலை திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தில் சிற்றுண்டி அருந்தியுள்ளனர். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 19 மாணவ மாணவிகளுக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்ட 19 மாணவர்களை உடனடியாக மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் […]
Continue reading …
கணவன் கண் முன்னே இருசக்கர வாகனத்தில் சென்றபோது கிரைன் மீது மோதியதில் சக்கரத்தில் சிக்கி மனைவி பரிதாபமாக பலியானார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள ஆவுடைபொய்கை அருகே கேரளா வைத்தியசாலை ஒன்றில் பெட்டிக்கடை வைத்துள்ள நாச்சியப்பன் என்பவரின் மனைவி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஞ்சலகத்தில் பணிபுரிந்து வரும் வளர்மதிக்கு சிகிச்சை பார்த்து வருகின்றனர். காரைக்குடி பகுதியில் லேசான மழை பெய்து வரும் பொழுது கணவன் நாச்சியப்பன் உடன் வளர்மதி இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது மழை பெய்ததால் […]
Continue reading …
அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதால், அவரது எம்எல்ஏ பதவி பறிபோனது. இதனால் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி இப்போது காலியாக உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி ஆக இருப்பவர் பதவி இழந்தால் அந்த தொகுதிக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும். மேல்முறையீடு செல்வதாக கூறி, மேல்முறையீடு நிலுவையில் உள்ளது உள்ளிட்ட காரணங்களை கூறி தேர்தலை தள்ளிப் போடக்கூடாது என ஏற்கனவே […]
Continue reading …
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் ஆய்வு செய்து வருகிறார். அந்தோணியார்புரம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அதன்பின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட நான்கு […]
Continue reading …
உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்குமான தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை பெற்றதால் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை பொன்முடி இழந்தார். பொன்முடி வகித்து […]
Continue reading …
ஸ்ரீரங்கம் வழியாக செல்லும் சில ரயில்கள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நின்று செல்லும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் கோவில்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் நாளை மறுநாள் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பை தரிசிக்க வருவது வழக்கம். இதனால் திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் […]
Continue reading …