
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வரும் 17ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 17ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
Continue reading …
அரசு உயர்நிலை பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 17 மாணவ- மாணவியர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மழைக்காலங்களில் பெரிய மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது என்பதை அரசு முன்கூட்டியே அறிந்து அதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, பள்ளிகளிலாவது அக்கறையோடு எடுத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “மதுரை மாவட்டம் மேலூர் அருகில் தெற்குத்தெரு அரசு உயர்நிலை பள்ளியில் மரம் வேரோடு […]
Continue reading …
நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநரை சந்தித்து பேச முதலமைச்சர் தயார் என தமிழ்நாடு அரசு உத்தநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயார் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஆளுநர் பல்வேறு மசோதாக்களையும் நிலுவையில் வைத்துள்ள நிலையில் தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது முழுக்க முழுக்க அரசியல் சாசனம் தொடர்பான விவகாரம். தேநீர் அருந்தி கேக் சாப்பிடுவதன் மூலம் […]
Continue reading …
இன்று நாடாளுமன்றத்தில் கூட்டம் தொடங்கிய போது பார்வையாளர்கள் மத்தியிலிருந்து இருந்து 2 நபர்கள் குதித்து வந்தனர். அவர்களிடம் வண்ணங்களில் ஆன புகை வீசும் குப்பி இருந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவர்கள் மணிப்பூருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அவர்கள் எவ்வித ஆவணமும் இன்றி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ணப் புகையை […]
Continue reading …
சமீபத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரும் சேதத்திற்கு தள்ளப்பட்டது. சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, மாவட்டத்தில தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் வசிக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் 6 வட்டங்களில் அதாவது பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் 2 நாட்களுக்கும் மேலாக […]
Continue reading …
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தேவ் சாய் பதவியேற்றுக் கொண்டார். ராய்ப்பூரில் நடந்த பதவியேற்பு விழாவில் விஷ்ணு தேவ் சாய்க்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அருண் சாவோ, விஜய் சர்மா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
Continue reading …
தமிழ்நாடு அரசு முதல்முறையாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த அறிவித்ததை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொது தேர்வு விரைவில் நடைபெற இருக்கும் இந்நிலையில் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதிப்பெண் குறைவாக இருப்பதாக மாணவர்கள் கருதினால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மறு மதிப்பீடு கோரியும் விண்ணப்பம் செய்யலாம் […]
Continue reading …
வலைதளம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “மாநகரம்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் கார்த்தி நடிப்பில் “கைதி,” விஜய் நடிப்பில் “மாஸ்டர்,” கமல்ஹாசன் நடிப்பில் “விக்ரம்” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கத்தில், விஜய், திரிஷா, சஞ்சய் தத் ஆகியோ நடிப்பில் வெளியான “லியோ” திரைப்படம் வசூலை அள்ளி குவித்தது. லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தலைவர் 171 என்ற படத்தை இயக்கவுள்ளார். இதற்காக […]
Continue reading …
அஸர்பைஜானில் தற்போது அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” ஷூட்டிங் நடந்து வருகிறது. அஜீத், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். அஜர்பைஜானில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு விறுவிறுப்பான கார் சேஸிங் சண்டைக்காட்சி ஒன்றை ஹாலிவுட் கலைஞர்கள் உதவியோடு படமாக்கி உள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி. ஜனவரி இறுதிவரை அஜர்பைஜானில் நடக்க இருந்த விடாமுயற்சி ஷூட்டிங்கை திடீரென நிறுத்திவிட்டு இப்போது சென்னை வந்த படக்குழு இப்போது […]
Continue reading …
கடந்த ஆண்டே சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கடந்த மாதம் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதனால் காஷ்மீரில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட இந்த படத்தின் ஷூட்டிங் அதிக நாட்கள் […]
Continue reading …