Home » Posts tagged with » Netrikkan (Page 168)

ஆர்.கே.சுரேஷிடம் 7 மணி நேரம் விசாரணை!

Comments Off on ஆர்.கே.சுரேஷிடம் 7 மணி நேரம் விசாரணை!

நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனக்கும் ஆருத்ரா மோசடிக்கும் எவ்விதமான தொடர்புமில்லை என்று தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்.கே.சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆருத்ரா மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, திடீரென ஆர்.கே.சுரேஷ் துபாய்க்கு சென்று விட்டார். அவர் சமீபத்தில் சென்னை திரும்பியவர் பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது அவர் “தனக்கும் ஆருத்ரா மோசடிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சில […]

Continue reading …

வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Comments Off on வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

17% ஊதிய உயர்வு பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு வழங்க இந்திய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் வாரத்திற்கு இனி 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற தகவல் வெளியாகி உள்ளது. f ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழே இந்தியாவில் உள்ள அனைத்துப் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இயங்கி வருகிறது. சமீபத்தில் பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி, பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க இந்திய கூட்டமைப்பு […]

Continue reading …

தொடங்கியது “பையா 2” வேலைகள்!

Comments Off on தொடங்கியது “பையா 2” வேலைகள்!

கடந்த 2011ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் “பையா.” கார்த்தியின் சினிமா கேரியரில் இன்றளவும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது இத்திரைப்படம். இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. படத்தில் ஹீரோவாக கார்த்திக்கு பதில் ஆர்யா நடிப்பார் என சொல்லப்பட்டது. பின் கார்த்தியே அதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. லிங்குசாமி நடிகர் கார்த்தியை சந்தித்து “பையா 2” கதையை விவரித்ததாகவும், […]

Continue reading …

நான்காவது முறை இணையும் அஜீத் – ஹெச்?

Comments Off on நான்காவது முறை இணையும் அஜீத் – ஹெச்?

ஹெச் வினோத் “சதுரங்க வேட்டை,” “தீரன் அதிகாரம் ஒன்று” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். அடுத்து அஜித்தை வைத்து தொடர்ச்சியாக “நேர்கொண்ட பார்வை,” “வலிமை” மற்றும் “துணிவு” ஆகிய படங்களை இயக்கினார். “துணிவு” திரைப்படத்திற்க்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கமல்ஹாசன் முதலில் மணிரத்னம் படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு பிரபாஸ் நடிக்கும் “கல்கி” படத்தில் நடிக்க […]

Continue reading …

ஐந்து மொழிகளில் டப்பிங் பேசிய பிருத்விராஜ்!

Comments Off on ஐந்து மொழிகளில் டப்பிங் பேசிய பிருத்விராஜ்!

“கேஜிஎப்” திரைப்பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிக்கும் “சலார்” திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி “சலார்” ரிலீசாகவுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் கடந்த டிசம்பர் 1ம் தேதி ரிலீசானது. 5 மொழிகளில் வெளியான இந்த டிரெயிலர் மொத்தம் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இரண்டு நண்பர்கள் எப்படி எதிரிகள் ஆனார்கள் […]

Continue reading …

மக்களவைத் தேர்தலில் துரை வைகோ போட்டியா?

Comments Off on மக்களவைத் தேர்தலில் துரை வைகோ போட்டியா?

மதிமுகவுக்கு வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் இரண்டு தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஒரு தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் உடையாமல் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மதிமுகவும், திமுக கூட்டணியில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சிக்கு திமுக ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் வழங்கும் என்றும் கூறப்படுகிறது. மதிமுகவின் நிர்வாக குழு கூட்டத்தில் பேசியபின் வைகோ செய்தியாளர்களிடம், “மதிமுகவின் முதன்மை செயலர் துரை […]

Continue reading …

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா எப்போது!

Comments Off on அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா எப்போது!

முன்னாள் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதால் இந்துக்களின் கனவு நனவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அயோத்தியில் ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் 16ம் தேதி அதற்கான பூஜைகள் தொடங்குகின்றன. இதற்காக 4000 துறவிகள் வரவழைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் மற்றும் பிஆர்எஸ் கட்சியின் மேலவை உறுப்பினர் கவிதா தனது வலைதள […]

Continue reading …

வெள்ள பாதிப்புக்குள்ளான வல்லுனர்கள் கருத்து!

Comments Off on வெள்ள பாதிப்புக்குள்ளான வல்லுனர்கள் கருத்து!

வல்லுனர்கள் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ டிரோன்களை பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடந்தாண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு ஆகியவற்றில் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. மனிதர்களால் செல்ல முடியாத பகுதிக்கு டிரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அதேபோல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது டிரோன்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு தண்ணீர் உணவு போன்ற பொருட்களை அளித்திருக்கலாம். ஆனால், தமிழக அரசு அதை ஏன் செய்யவில்லை […]

Continue reading …

சுப்ரீம் கோர்ட் ஜம்மு காஷ்மீர் குறித்து அதிரடி தீர்ப்பு

Comments Off on சுப்ரீம் கோர்ட் ஜம்மு காஷ்மீர் குறித்து அதிரடி தீர்ப்பு

சுப்ரீம் கோர்ட் ஜம்மு காஷ்மீரின் தனி அந்தஸ்து ரத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து தலைமை நீதிபதி “இந்தியாவுடன் இணைந்த பிறகு தனது முழுமையான இறையாண்மையை காஷ்மீர் இழந்து விடுகிறது, இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் அரசியலமைப்பு, ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி இறையாண்மையோ, ஆட்சி உரிமையோ இருக்க முடியாது. சட்டப்பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு என நாங்கள் கருதுகிறோம், 370 சட்டப்பிரிவு மாநிலத்தில் போர் நிலைமைகள் காரணமாக ஒரு இடைக்கால […]

Continue reading …

பிரதமர் குறித்து புதினின் பேட்டி!

Comments Off on பிரதமர் குறித்து புதினின் பேட்டி!

ரஷ்யா அதிபர் புதின் இந்திய பிரதமர் மோடியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கேள்விக்கு அவர் பதிலளித்தபோது “இந்தியாவின் நலன் இந்திய மக்களை நலம் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது. அவர் யாருக்கும் பயப்பட மாட்டார். மோடியை அச்சுறுத்த […]

Continue reading …