
சமீபத்தில் கிருத்திகா உதயநிதி ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் 33வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இவர்களுடன் யோகி பாபு, மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு “காதலிக்க நேரமில்லை” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி […]
Continue reading …
பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது அத்திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான வரவு, செலவுகள் ஏனைய நிர்வாகங்கள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில், சென்னை […]
Continue reading …
இன்னும் ஒரு சில நாட்களில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறவும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இன்று முதல் மூன்று நாட்களுக்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகம் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழை […]
Continue reading …
பொதுமக்கள் மாஸ் அணிய வேண்டும் என்று புதுச்சேரியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து புதுச்சேரி சுகாதாரத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இன்புளுயன்சா காய்ச்சல் பரவல் காரணமாக புதுச்சேரியில் வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நெரிசலான இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் […]
Continue reading …
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் இருந்து பெரம்பலூர் ஏறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலையை காணொலி வாயிலாக திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் உரையாற்றிய போது, “முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழகம் உள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம். முதல்கட்டமாக ரூ.400 கோடி முதலீட்டில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 2028ம் ஆண்டிற்குள் ரூ.2440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி […]
Continue reading …
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். இவரோடு படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. படம் ஹாலிவுட்டில் 2012ம் ஆண்டு வெளியான “லூப்பர்” படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் […]
Continue reading …
மலையாள சினிமாவில் மீண்டும் ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘காதல்’. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் நவம்பர் 23ம் தேதி ரிலீசானது. இத்திரைப்படம் தன்பாலின ஈர்ப்பு குறித்து சிறப்பாக பேசியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மூத்த நடிகரான மம்மூட்டி தன்பாலின ஈர்ப்பாளராக நடித்துள்ளது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக மம்மூட்டியின் கதாபாத்திரம் பலரையும் ஈர்த்துள்ளது. படத்தைப் பார்த்த நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி படத்தை பற்றி, “மம்மூக்கா நீங்கள் தொடர்ந்து எங்களை […]
Continue reading …
சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றத்திலும் ஜாமீன் மறுக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்க என்ன காரணம் என்பது குறித்து நீதிபதி விளக்கமளித்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு மூளையில் ரத்தக்கட்டு இருந்ததாகவும் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் அது உறுதி செய்யப்பட்டதாகவும் எனவே அவரது சிகிச்சைக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது ஆனால் இது குறித்து […]
Continue reading …
கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்டார். அவருடைய மனைவி மற்றும் மகள் வெளிநாட்டுக்கு தப்பித்து விட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த செய்தி உறுதிப்படுத்தவில்லை. அவ்வப்போது ஈழத்தமிழர்களும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவருடைய மனைவி மற்றும் மகளும் உயிரோடு இருப்பதாக கூறி வருகின்றனர். நேற்று பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 27ம் தேதி திடீரென பிரபாகரன் மகள் என்று கூறப்படும் துவாரகா வீடியோ வைரலானது இந்த […]
Continue reading …