
இந்தியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்து மெக்சிகோவில் நடந்துள்ளது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலையில், மேற்கு மெக்சிகோவில் 42 பயணிகளுடன் பேருந்து ஒன்று, அமெரிக்க நாட்டின் எல்லையிலுள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டிருந்தது. இதில், இந்தியர்கள், டொமினிகன் குடியரசு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர். இப்பேருந்து, மாநில தலைநகரான டெபிக்கிற்கு நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே […]
Continue reading …
பியூட்டி பார்லருக்கு சென்ற பெண் அங்கு முடிவெட்டிக் கொள்வதற்காக எண்ணெய் தடவியதும், கையுடன் தலைமுடி கொத்தாக வந்ததில் அதிர்ச்சியடைந்ததால் போலீசில் புகாரளித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகர், ஓல்ட் சிட்டியைச் சேர்ந்த பெண் தன் தலைமுடியை வெட்டிக் கொள்வதற்காக அருகில் உள்ள அபிட்ச் பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்குச் சென்றிருந்தார். பார்லரில் இருந்த அழகுக்கலை நிபுணர் அப்பெண்ணுக்கு தலைமுடியில் ஒருவித எண்ணெய்யை தடவி, அதன்பின்னர், முடியை வெட்டியதாகவும், பின், தலைமுடி கொத்தாக கொட்டி, கொஞ்ச நேரத்திலேயே உச்சந்தலையில் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பில், “கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சபரிவாசன், த/பெ. சரவணன் (வயது 10) மற்றும் யோகேஸ்வரன். த./பெ.கணேஷ் (வயது8) ஆகிய இரண்டு சிறுவர்களும் நேற்று மதியம் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் […]
Continue reading …
“ஜாக்சன் துரை” திரைப்படத்தின் 2வது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படம் சத்யராஜின் 250வது படம். தரணிதரன் “பர்மா,” “ஜாக்சன் துரை” மற்றும் “ராஜா ரங்குஸ்கி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் உருவான “ஜாக்சன் துரை” படத்தில் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். சத்யராஜ் இப்படத்தில் பேய் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் மீண்டும் இணைந்து […]
Continue reading …
சில தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா முன் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த் பருந்து மற்றும் காக்கா கதையை கூறியதையடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக அவர் விஜய்யை குறிப்பிட்டுதான் அந்த கதையை சொன்னதாக சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்றன. ரஜினி அந்த மேடையில் “பறவைகளில் காக்கா எப்போதும் பலருக்கு தொல்லை கொடுக்கும், ஆனால் பருந்து யாருக்கும் தொல்லை கொடுக்காது. கழுகை கூட காக்கா […]
Continue reading …
இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் குமார் “திரிஷா இல்லன்னா நயன்தாரா” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் 18+ பிளஸ் படங்களில் நடித்து வந்தவர் பின்னர் நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்தார். ஆனால் அவரின் படங்கள் பெரிதாக வெற்றி பெறாத காரணத்தால், இப்போது நடிப்பு மற்றும் இசை என இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறார். இப்போது அவர் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ‘டியர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்க, நட்மெக் புரொடக்ஷன்ஸ் சார்பில் […]
Continue reading …
ஹார்ட் எமோஜி அறிமுகமில்லாத பெண்களுக்கு சமூக வலைதளங்களில் அனுப்பினால் சிறை என சவுதி அரேபியாவில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. சவூதி அரேபியா மற்றும் குவைத் அரசுகள் பேஸ்புக், ட்விட்டர், மெசஞ்சர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் இமோஜி அனுப்பக்கூடாது என்றும் மீறி அனுப்பினால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றி உள்ளதாக தெரிவித்துள்ளன. அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பியது நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு […]
Continue reading …
நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக பிரமுகர் சாமிநாதன் வீட்டில் சோதனை செய்ததோடு அவரது வீட்டில் இருந்து ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை செய்தது. சோதனை தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் சாமிநாதன் தோட்டத்து பங்களாவில் சில ஆவணங்கள் கிடைத்ததாகவும் அந்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் அள்ளிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. திமுக பிரமுகர். சாமிநாதன் அமைச்சர் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தாண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தமிழகத்திலுள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி காண்பது உறுதி என தெரிவித்துள்ளார். நேற்று அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற நடை பயணத்தை சமீபத்தில் தொடங்கி சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவர் பழைய பேருந்து நிலையம், ஐந்து விளக்கு, பெரியார் சிலை வழியாக நூறடி சாலையை நடந்தார். அப்பகுதியில் உள்ள மக்கள் முன் அவர் பேசிய போது “தமிழகம் புதுச்சேரியில் 40 […]
Continue reading …
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அந்த மசூதி இந்து கோவிலை இடித்துக்காட்டியது என இந்துக்கள் கூறி வருகின்றனர். இது குறித்து தொல்லியல்துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மசூதி ஏற்கனவே சிவலிங்கம் கோயில் ஆக இருந்ததாகவும் அவுரங்கசீப் காலத்தில் தான் அதை இடித்து ஞான வாபி மசூதியாக கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த வழக்கில் ஞானவாபி மசூதியில் அகழாய்வை தொடர்ந்து நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு […]
Continue reading …