
திருமணம் நடைபெற சில மணி நேரங்களே இருந்த நிலையில் மணமகன் மண்டத்திற்கு வராமல் ஓட முயன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பதான் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞருக்கு இளம்பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் இரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணம் செய்ய குடும்பத்தில் உள்ளவர்கள் முடிவெடுத்தனர். இருவீட்டாரின் கலந்துபேசி ஞாயிற்றுக்கிழமையன்று பூதேஸ்வர நாத் கோயிலில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். திருமண தினத்தன்று மணமகன் வெகு நேரமாகியும் மேடைக்கு வரவில்லை. மணப்பெண் திருமணத்திற்குக் காத்திருக்கும்போது, போனில் […]
Continue reading …
ஆவின் பால் நிறுவனம் தமிழகத்தில் அமுல் நிறுவனம் கால் பதிப்பது பற்றிய விளக்கமளித்துள்ளது. ஆவின் பால் நிறுவனம் பால் பொருட்கள் விற்பனையில் முன்னணியாக உள்ளது. இதுதவிர தனியார் துறையைச் சேர்ந்த பால் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமான அமுல் நிறுவனம் வெளிமாநிலங்களிலும் கால்பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆவின் கொடுப்பதைவிட லிட்டருக்கு ரூ.2 அதிகம் கொடுப்பதாகக் கூறி, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள […]
Continue reading …
மகா சுசீந்திரன் மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்பு அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகர் மாவட்ட பாஜக 18 நிர்வாகிகள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டது. பதவி கிடைக்காத ஆத்திரத்தில் ஒரு சிலர் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். மதுரை பாஜக பெண் கவுன்சிலர் பூமா ஜனா ஸ்ரீ முருகன் தனக்கு விரும்பிய பதவி கிடைக்காததால் […]
Continue reading …
உபேந்திரா சிங் என்பவர் கண்டுபிடித்த பிரதமர் பெயரிலான மாம்பழம் விரைவில் உத்தரபிரதேசத்திலிருந்து இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பழங்கள், காய்கறிகளில் ஒன்றுடன் ஒன்றை இணைத்து ஆய்வு செய்து பல புதிய ரகங்களை வேளாண் ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த உபேந்திரா சிங் என்பவர் அப்பகுதியில் விளையும் புகழ்பெற்ற துஸ்ஸேரி மாம்பழத்துடன் உள்ளூர் மாங்கனிகளை இணைத்து புதிய ரக மாம்பழத்தை தயாரித்துள்ளார். பிரதமர் மோடியின் பெயரிடப்பட்ட இந்த புதிய மாம்பழ […]
Continue reading …
பல ஆண்டுகளாகவே இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. காசா முனையை ஹமாஸ் என்ற அமைப்பு பாலஸ்தீனத்தின் ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் நாடு பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. இதேபோன்று பல ஆயுதமேந்திய அமைப்புகள் காசா முனை மற்றும் மேற்குகரையில் இயங்கி வருகின்றன. பாலஸ்தீனத்திற்கு மேற்குகரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இப்பகுதியின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீன ஆயுதமேந்திய […]
Continue reading …
சென்னை மெட்ரோ ஐபிஎல் சீசன் நடந்து வரும்போது சென்னையில் நடைபெறும் ப்ளே ஆப் போட்டிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மெட்ரோ ரயில் சேவை இனி கிடையாது என அறிவித்துள்ளது. ஐபிஎல் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. ஐபிஎல் சீசனை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை காண சென்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோவில் டிக்கெட் இல்லாமல் இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டது. சென்னையில் நடந்த அனைத்து லீக் போட்டிகளுக்கும் […]
Continue reading …
நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானதாக அறிவிக்கப்பட்டது. இன்று அவர் உண்மையிலேயே காலமானார் என்ற தகவல் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே நடிகர் சரத்பாபு உடல்நல கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நலம் தேறிக் கொண்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். திடீரென அவர் காலமானதாக சில நாட்களுக்கு முன் வதந்தி கிளம்பியது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் இது குறித்து விளக்கமளித்தனர். தற்போது […]
Continue reading …
திடீரென்று ஸ்பெயின் நாட்டின் தென்மேற்குப் பகுதியிலுள்ள எக்ஸ்ட்ரீமதுராவில் உள்ள வனப்பகுதியில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் தென்மேற்குப் பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரீமதுராவில் உள்ள வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அங்கு வீசிய காற்று மற்றும் வறண்ட தட்பவெப்பத்தால், தீ காட்டின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது. இதனால், அந்த வனப்பகுதிகளைச் சுற்றிலும் இருந்த கடல்சோ, டெஸ்கார்கமரியா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பகுதியில் போக்குவரத்தும் […]
Continue reading …
அடுத்து வரும் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கடுமையான வெயிலும் இருக்கும், மழையும் பெய்யும் என்று வானிலைமையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் மே 26ம் தேதி வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்ப சலனம் காரணமாகவும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மீதமான மழை முதல் கன மழை வரை பெய்யக்கூடும். மேலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, […]
Continue reading …
“மாமன்னன்” திரைப்படத்தின் முதல் சிங்கில் பாடல் ஏ.ஆ.ரஹ்மான் இசையில், நடிகர் வடிவேலு பாடியுள்ளார். இப்பாடலை நடிகர் சூரி பாராட்டியுள்ளார். “கர்ணன்” படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முழுதும் நிறைவடைந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் […]
Continue reading …