
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “கூட்டணி கட்சிகள் இடையே சில சிராய்ப்புகள் வருவது அரசியலில் சகஜம்தான்” என டில்லியில் பேட்டியளித்துள்ளார். நேற்று டில்லி சென்ற அண்ணாமலை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நாட்டா ஆகியோர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “பிரதமர் மோடி அமித்ஷா மற்றும் ஜே பி நட்டா ஆகியவர்களை பல்வேறு விஷயங்களை சந்தித்தேன். கர்நாடக மாநில தேர்தல் உள்பட பல […]
Continue reading …
மம்தா கட்சியின் எம்பிக்கள் தொழிலதிபர் அதானியை கைது செய்ய வேண்டும் என நிதி அமைச்சகத்தின் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலதிபர் கவுதம் அதானியை பங்குச்சந்தையில் மோசடி செய்ததாகவும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதன் காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளது மட்டுமின்றி அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்த எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்களின் மதிப்பு வெகுவாக குறைந்தது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் […]
Continue reading …
நடிகர் அஜீத்தின் தந்தை பி.எஸ்.மணி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சசிகலா, தினகரன், அன்புமணி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் அஜீத் தந்தை மறைவிற்கு தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜீத்தின் வீட்டிற்கு நேரடியாக சென்ற நடிகர் விஜய் அஜித் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவருக்கு […]
Continue reading …
இன்று மாலை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வை 18 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிந்து பல மாதங்கள் ஆன பின்னும் இன்னும் முடிவுகள் வரவில்லை. இது குறித்த ஹேஷ்டேக் திடீர் என கடந்த சில நாட்களுக்கு முன் டுவிட்டரில் வைரலானது. டிஎன்பிஎஸ்சி இது குறித்து சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் […]
Continue reading …
காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்திக்கு தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என கூறப்படுகிறது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் […]
Continue reading …
சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடிய ஈஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டார்.அவர் தன்னுடைய கணவரிடம் தான் “நான் ஐஸ்வர்யாவின் பினாமி” என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதாக கைது செய்யப்பட்ட ஈஸ்வரி இடம் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரிடமிருந்து நகைகள் ரொக்கம் மற்றும் நில பத்திரம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஈஸ்வரிக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது? என்ற […]
Continue reading …
அமெரிக்கா மாகாணத்தில் உள்ள கலிபோர்னியாவில் புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் பிரெட்டி புயல் கடும் பாதிப்புகளையும்,300க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. அமெரிக்க நாட்டில், கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி புயலால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கலிபோர்னியாய சக்திவாய்ந்த புயல் தாக்கி கடும் சேதங்களை ஏற்படுத்தியது. இதில், வீடுகளைச் சுற்றிலும் வெள்ள நீர்சூழ்ந்து கொண்டுள்ளது. இதனால், பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் எனக்கு யாரும் நண்பர்களும் கிடையாது எதிரிகளும் கிடையாது என்று கூறியுள்ளார். இன்று டில்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது வடிவேலு நடித்த 23ம் புலிகேசி படம் போல் இருக்கிறது. சமூக வலைதளத்தில் யார் தவறாக பேசுகிறார்கள் என்று தினமும் கேட்டு அவர்களை கைது செய்வதில் தான் அரசு முனைப்பு காட்டுகிறது. பெண்கள் குழந்தைகள் மீது வன்பத்தை காட்டுபவர்கள் […]
Continue reading …
திருவண்ணாமலையில் உள்ள பிரசித்திப்பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். கோவிலில் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரம் ஆகிய மூன்று வாயில் வழியாக பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இன்று நண்பகல் வேளையில், தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரம் வழியாக நபர் ஒருவர் அனுமதியின்றி கத்தியுடன் நுழைந்து, அங்கிருந்த பக்தர்களை பயமுறுத்தினார். உடனே பக்தர்கள் அங்கிருந்து கத்திக்கொண்டு ஓடினர். பின்னர், கோவிலிலுள்ள ஊழியர்களிடம் அவர் தகராறு செய்தார். இதுகுறித்து, ஊழியர்கள் […]
Continue reading …
கரூர் மாவட்டத்தில் வாய்க்காலில் செத்துக்கிடக்கும் லட்சக்கணக்கான மீன்கள் துர்நாற்றம் அடித்தும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், இலாலாபேட்டை பகுதியில் காவிரி ஆற்றின் ஓரத்தில் பாயும் தென்கரை மருதாண்டன் வாய்க்காலில் தண்ணீர் தற்போது அடைக்கப்பட்டுள்ளது. தேங்கிய நீர் இலாலாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து விட்டுக்கட்டி, சிந்தலவாடி வரை தண்ணீர் ஆங்காங்கே ஒரு அடி மற்றும் 1/2 அடி மட்டம் வரை தேங்கிய நிலையில் மீன்கள் லட்சக்கணக்கில் செத்து மிதக்கின்றன. […]
Continue reading …