
விரைவில் புதுவையில் பிரிபெய்டு மின் திட்டம் கொண்டு வரப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரியில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தற்போது மின் மீட்டரில் கணக்கு எடுக்கப்பட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் நுகர்வோர் உடன் பிரீபெய்டு மின் கட்டணம் வசூலிக்க புதுவை மின்சாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இந்த திட்டத்தின் மூலம் 4 லட்சம் ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மின் மீட்டர்கள் […]
Continue reading …
டில்லியில் நாடாளுமன்ற சாலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் நடத்த திட்டமிட்டுள்ள பேரணி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டில்லி நாடாளுமன்ற சாலையில் நாடாளுமன்றம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை 18 கட்சி எம்பிக்கள் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். நாடாளுமன்ற சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தடையை மீறி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சி […]
Continue reading …
நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் அருண் விஜய் பல வருடங்களாக போராடி “தடையற தாக்க” மற்றும் “தடம்” போன்ற திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து இப்போது முன்னணி நடிகராகவுள்ளார். அவர் இப்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு புது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் பெரும்பகுதி நடந்தது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடிக்கும் இந்த படத்துக்கு ‘அச்சம் என்பது இல்லையே’ […]
Continue reading …
இன்று தமிழ்நாட்டில் நடந்த +2 ஆங்கிலப் பாடத்தேர்வை 49 ஆயிரம் மாணவிகள் எழுதவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் 13ம் தேதி 2022&-23ம் கல்வி ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ -மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுக்காக 3 ஆயிரத்து 225 இடங்களில் தேர்வு மையங்கள் […]
Continue reading …
அமைச்சர் மா சுப்பிரமணியன் வைரஸ் காய்ச்சலால் தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்பது பற்றி தகவல்கள் வெளியிட்டுள்ளார். புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுவை போலவே தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது. புதுவை மாநிலத்தை போலவே தமிழகத்திலும் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் […]
Continue reading …
ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் 8 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் இந்தியா முழுவதும் மேலும் 34 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுதும் மொத்தம் 365 நகரங்களில் 5ஜி சேவை இயங்கி வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 22 நகரங்களில் 5ஜி சேவை இருக்கும் நிலையில் தற்போது […]
Continue reading …
அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீயசக்தி தி.மு.க.வின் ஆட்சியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 15ம் தேதி டிடிவி.தினகரனால் தொடங்கப்பட்ட கட்சி அமமுக. இக்கட்சியின் ஆறாம் ஆண்டு தொடக்கவிழா இன்று சென்னையிலுள்ள அமமுக தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஆளுங்கட்சியான திமுக அரசை விமர்சித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், “தீயசக்தி தி.மு.க.வின் ஆட்சி அமைந்து 2 ஆண்டு காலம் ஆவதற்கு உள்ளாகவே […]
Continue reading …
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர், கடந்த 2017ம் ஆண்டு ‘மாநகரம்‘ என்ற படத்தை இயக்கினார். இப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து, நடிகர் கார்த்தி நடிப்பில் ‘கைதி’ என்ற திரைப்படத்தை […]
Continue reading …
சமீபத்தில் நடிகர் விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் “லியோ” திரைப்படத்தின் புரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கவுள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு மோசமான வானிலை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை […]
Continue reading …
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கார்த்திக் சுப்பராஜ், தன்னுடைய ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலமாக படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் அவர் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கிய டிஎஸ்பி படத்தைத் தயாரித்திருந்தார். படம் படுதோல்வியடைந்தது. அடுத்து அவர் விஷால் நடிப்பில் உருவாகும் படத்தை தயாரிக்க உள்ளார். இத்திரைப்படத்தையும் முதலில் பொன்ராம்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த படத்தை இயக்க பாண்டிராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. பாண்டிராஜின் கடைசிப் […]
Continue reading …