
மத்திய தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் காலியாக உள்ள 577 பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 418 அமலாக்க அதிகாரி பணியிடங்களும், 159 உதவி நிதி ஆணையர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அமலாக்க அதிகாரி பணிக்கு வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும், உதவி நிதி ஆணையர் பணிக்கு வயது வரம்பு 35க்குள் […]
Continue reading …
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயற்கையான மின் தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். கோடையில் மின்வெட்டு என்பது ஒரு முக்கிய பிரச்னைகளில் ஒன்று. கோடையில் மின் உற்பத்தி குறைவாக இருக்கும் என்பதால் மின் தட்டுப்பாடு நிலவும் என்றும் அதனால் மின்வெட்டு ஏற்படுவது என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய போது, “செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துவதோ என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது. திமுக ஆட்சிக்கு […]
Continue reading …
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஹெச்3என்2 காய்ச்சல் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முன்னெச்சரிக்கை குறித்து அறிவித்துள்ளார். ஹெச்3என்2 காய்ச்சல் கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் பரவி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே மத்திய அரசு மருத்துவர்களுக்கு ஹெச்3என்2 வைரஸ் காய்ச்சல் வந்தவர்களுக்கு ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்திருந்தது. இவ்வகையான வைரஸ் காய்ச்சலுக்கு […]
Continue reading …
சிறுமி ஒருவரிடம் மும்பையில் இளைஞர் ஒருவர் இன்ஸ்டாவில் பாலோயர்ஸை அதிகரிப்பதாகக் கூறி ரூ.55 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார். சமூக வலைதளங்களில் பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரையிலும் பலரிடம் பணமோசடி அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன் பிரபல நடிகை ஸ்வேதா மேனனிடம் மர்ம நபர்கள் வங்கி விவங்களைப் பெற்றுக்கொண்டு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50,000க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தனர். இதுகுறித்து, காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மும்பையில் மீண்டும் […]
Continue reading …
உலக மக்கள் பெரும்பாலும் தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய்கள் மற்றும் பூனைகள் போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். செல்லப்பிராணிகள் உள்நாடு, வெளிநாடு என எங்கிருந்தாலும் அதற்கு உரியவிலை கொடுத்து, வாங்கி வந்து வீட்டில் பராமரிப்பவர்களும் உண்டு. சில நேரங்கள் நாய்கள், பூனைகள் செல்லப்பிராணிகள் என்பதைத்தாண்டி, அவை குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே ஆகிவிடுவதுண்டு. ஆனால், செல்லப்பிராணிகளை கொடுமை செய்பவர்களும் உள்ளனர். தென்கொரிய நாட்டில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர், சுமார் 1000 நாய்களைத் தன் வீட்டில் அடைத்துவைத்து, அவைகளுக்கு […]
Continue reading …
பாஜகவுடன் அதிமுக கட்சியின் கூட்டணி தொடர்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருப்பது கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் முன்னணி தலைவர்கள் ஒரு பக்கம் பாஜக மற்றும் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். ஆனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம், “பாஜக உடனான கூட்டணி தொடர்கிறது, கூட்டணி குறித்து அதிமுக எந்த சர்ச்சையுகருத்தும் கூறவில்லை, ஆனால் அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து பாஜக நடவடிக்கை […]
Continue reading …
ஹிஜாப் அணியாத விவகாரத்தில், ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு, இளம்பெண் மாஷாவை போலீசார் கைது செய்தனர். அவர் மர்மமாக உயிரிழந்ததை அடுத்து, அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையானது. இச்சம்பவத்தை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவிகளுக்கு விஷம் கொடுத்ததாக தகவல் வெளியானது. ஈரானில் உள்ள 31 மாகாணங்களில் சுமார் 21 மாகாணங்களில் இந்த நிகழ்வு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது அரசின் கவனத்திற்குச் சென்ற […]
Continue reading …
சமூக வலைதளங்களில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து ஊழியர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 டெபாசிட் செய்யப்படும் என்ற செய்தி பொய்யானது என்று போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார். விஏஓ அலுவலகத்தில் ஆவணங்களை வாங்கி தமிழ்நாடு போக்குவரத்து ஆணையத்தில் ஓட்டுநர்கள் சமர்ப்பித்தால் ஆயிரம் ரூபாய் தருவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்றும் இது உண்மைக்கு புறம்பானது என்றும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது பொய்ச்செய்தி என்றும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற தவறான […]
Continue reading …
கடந்த 10 மாதங்களில் இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு புதிய உச்சம் அடைந்துள்ளதாகவும், 20% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஜனவரி மாதம் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை 29.6 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஜனவரியில் மொத்த நிலுவைத் தொகை 1,86,783 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிரெடிட் கார்டு பயன்பாட்டின் புதிய உச்சம் ஆகும். இது கடந்த ஆண்டு ஜனவரியில் 1,41,254 கோடி ரூபாயாக நிலுவை தொகை […]
Continue reading …
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவன தலைவராக இருப்பவர் எலான் மஸ்க். 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். அதன்பின்னர், அங்குப் பணியாற்றிய ஊழியர்கள் சிலரை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில், டுவிட்டரில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், எலான் மஸ்கிடம், “தான் பணியில் இருக்கிறேனா இல்லையா’’ என்று எலான் மஸ்கிடம் கேட்டிருந்தார். இதற்கு எலான் மஸ்க், அப்பெண்ணின் மாற்றுத்திறனைச் சுட்டிக்காட்டி, அவர் […]
Continue reading …