Home » Posts tagged with » Netrikkan (Page 341)

மண்ணை விட்டு பிரிந்த நடிகர் மயில்சாமி!

Comments Off on மண்ணை விட்டு பிரிந்த நடிகர் மயில்சாமி!

பல திரைப்படங்களின் மூலம் தனது நகைச்சுவையால் மக்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் நடிகர் மயில்சாமி. இவர் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்ந்தது. சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த நடிகர் மயில்சாமி, சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி பங்கேற்ற மயில்சாமி, கோயிலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீடு […]

Continue reading …

எலான் மஸ்க்கின் பரபரப்பு பேச்சு!

Comments Off on எலான் மஸ்க்கின் பரபரப்பு பேச்சு!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் அமெரிக்காவில் அடுத்தடுத்து மர்ம பொருள்கள் வான் பரப்பில் தோன்றி வரும் நிலையில் அவர், “எனது ஏலியன் நண்பர்கள் தான் வந்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு அமெரிக்கா வான்பரப்பில் முன்னர் மர்ம பலூன்கள் பறந்த நிலையில் அதை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பின்னர் அந்த பலூன் சீனாவின் உளவு பலூன் என்று கூறப்பட்டது என்பதும், ஆனால் சீனா அதை மறுத்தது. இதையடுத்து […]

Continue reading …

அமெரிக்காவில் பறக்கும் பொருட்கள்!

Comments Off on அமெரிக்காவில் பறக்கும் பொருட்கள்!

சமீபத்தில் அமெரிக்காவின் வானில் தோன்றி வரும் உளவு பொருட்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் ராணுவ அணு சக்தி தளம் மீது கடந்த பிப்ரவரி 10ம் தேதியன்று பறந்து சென்ற உளவு பலூன் ஒன்றை கடல் பரப்பில் வைத்து அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதேநாளில் அலாஸ்காவிலும் மர்ம பொருள் ஒன்று தோன்ற அதையும் அமெரிக்க வான்படை சுட்டு வீழ்த்தியது. அதன்பின்னர் அண்டை தேசமான கனடாவிலும் பறக்கும் பொருள் ஒன்றை தாங்கள் […]

Continue reading …

நடிகை ராஷ்மிகாவின் வீடியோ வைரல்!

Comments Off on நடிகை ராஷ்மிகாவின் வீடியோ வைரல்!

இந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ராஷ்மிகாவும் ஒருவர். இவர் “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார். இப்படத்தின் மூலம் இவருக்கு விருதுகள் குவிந்தது. அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு என்று பல மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் “கிரிக் பார்ட்டி” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் “கீதா கோவிந்தம்“ ஹிட்டால் அவரை கழட்டிவிட்டு விஜயதேவரகொண்டா மீது காதலில் விழுந்தார். அவ்வப்போது ரகசியமாக காதலன் விஜயதேவரகொண்டாவுடன் […]

Continue reading …

தமிழ்நாட்டின் 4 நகரங்களில் மாசு அதிகம்!

Comments Off on தமிழ்நாட்டின் 4 நகரங்களில் மாசு அதிகம்!

மத்திய அரசு தமிழ்நாட்டின் நான்கு நகரங்களில் அதிக மாசடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் இந்தியாவின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் குறித்த கேள்விக்கு, “நாடு முழுதும் 131 நகரங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திருச்சி, தூத்துக்குடி, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் காற்று மாசு அதிகளவில் உள்ளது. 23 மாநிலங்களில் 131 நகரங்களில் மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Continue reading …

அண்ணாமலை ஆவேசம்!

Comments Off on அண்ணாமலை ஆவேசம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை நகரம் கொலை நகரமாகிக் கொண்டிருக்கிறது என ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நேற்று கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுதும் அதிகரித்திருக்கின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஒட்டு மொத்த […]

Continue reading …

இந்தியாவின் முதல் ‘இ-டபுள் டக்கர்’ பேருந்து!

Comments Off on இந்தியாவின் முதல் ‘இ-டபுள் டக்கர்’ பேருந்து!

மும்பையில் இன்று இந்தியாவின் முதல் இ-டபுள் டக்கர் பேருந்து இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த டபுள் டக்கர் பேருந்தில் 90 பேர் வரை உட்கார்ந்து பயணம் செய்ய முடியும். மும்பை மாநகர போக்குவரத்து கழகம் 200 ‘இ-டபுள் டக்கர் எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. முதல் கட்டமாக சில பேருந்துகள் மட்டும் மும்பையில் சேவையை தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து […]

Continue reading …

கூகுள் நிறுவனத்திற்கு குண்டு மிரட்டல்!

Comments Off on கூகுள் நிறுவனத்திற்கு குண்டு மிரட்டல்!

உலகின் முன்னணி நிறுவனமான கூகுளுக்கு தொலைப்பேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் புனே நகரில் கூகுளின் கிளை அலுவலகம் உள்ளது. இங்குள்ள முந்த்வா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி வளாகத்தின் 11வது மாடியிலிருந்த அலுவலகத்தில் நேற்றிரவு ஒரு அழைப்பு வந்தது. அதில், நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துணை ஆணையர் விக்ராந்த் தேஷ்முக் தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்டு, சோதனை செய்தனர். அதில், வெடிகுண்டு மிரட்டல் […]

Continue reading …

நடுவானத்தில் விமான தீ விபத்து!

Comments Off on நடுவானத்தில் விமான தீ விபத்து!

டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்தபோது நடுவானில் தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்தில் இருந்து அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகருக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று விமானத்தின் எஞ்சின் தீப்பற்றியது. இதைக் கண்ட விமானிகள் உடனே அவசரமாக பிரேஸ்டவிக் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர். அங்கிருந்த பாதுகாப்புக் குழுவினர் பயணிகளை மீட்டு வெளியே கொண்டு […]

Continue reading …

லோகேஷ் கனகராஜ் பாராட்டிய பிரபல நடிகர்!

Comments Off on லோகேஷ் கனகராஜ் பாராட்டிய பிரபல நடிகர்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த சீரியல் நடிகர் கவினை பாராட்டியுள்ளார். கவின் நடிப்பில் “லிப்ட்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் சமீபத்தில், “டாடா” படம் வெளியானது. படத்தில் இவருக்கு ஜோடியாக “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்த அபர்ணாதாஸ் நடித்துள்ளார். இப்படத்தை கணேஷ் கே.பாபு இயக்கியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. தமிழகம் முழுதும் இப்படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. “லியோ” […]

Continue reading …