Home » Posts tagged with » Netrikkan (Page 365)

ஆளுநருக்கு டி.ஆர்.பாலு அட்வைஸ்!

Comments Off on ஆளுநருக்கு டி.ஆர்.பாலு அட்வைஸ்!

ஆளுநர் ஆர்.என்.ரவியை “ஆளுநராக செயல்படுங்க.. பாஜக தலைவராக அல்ல!” என டி.ஆர்.பாலு அட்வைஸ் செய்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீப காலமாக பேசும் கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதை தொடர்ந்து அவருக்கு பதிலளிக்கும் வகையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசியுள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது இந்து மத ரீதியாகவும், தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாகவும் பேசி வருவது திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் […]

Continue reading …

பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்!

Comments Off on பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு 5 லட்சமாக அதிகரிக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது 2.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உள்ளது. இந்நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக மக்கள் […]

Continue reading …

காதலனால் எரிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

Comments Off on காதலனால் எரிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

காதலி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் உயிரோடு தீ வைத்து கொளுத்தியுள்ளார் காதலன். இக்கொடும் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தீயில் கருகிய அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் பூஜா என்பவரை காதலித்து வந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி பூஜாவை லோகேஷ் வலியுறுத்தியுள்ளார். பூஜா திருமணத்திற்கு மறுத்ததால் திடீரென அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். 80 சதவீத […]

Continue reading …

நடிகர் சல்மானுடன் பூஜா ஹெக்டே!

Comments Off on நடிகர் சல்மானுடன் பூஜா ஹெக்டே!

நடிகர் சல்மான் கானுடன் ஜோடி சேர்ந்துள்ள பூஜா ஹெக்டே இணையத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “முகமூடி” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது “பீஸ்ட்” திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது. இப்படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இப்போது சல்மான் கானுடன் “கிசி கா […]

Continue reading …

விஜய் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டாரா?

Comments Off on விஜய் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டாரா?

இயக்குனர் லோகேஷ் அடுத்து இயக்கவிருக்கும் தளபதி 67 திரைப்பத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “விக்ரம்” திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார். இத்திரைப்படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. “மாஸ்டர்” திரைப்படத்தின் தாமதத்தால் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த படத்தில் 10 கோடி ரூபாய் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continue reading …

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புதிய தகவல்!

Comments Off on மத்திய சுகாதார அமைச்சகத்தின் புதிய தகவல்!

மத்திய சுகாதார அமைச்சகம் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 124 பயணிகளுக்கு கொரொனா மற்றும் 40 புதிய வகை தொற்று உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவிலிருந்து கடந்த 2020ம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது. இதன் 5ம் அலை விரைவில் பரலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சீனாவில் தற்போது பிஎப்-7 என்ற கொரொனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருவதால் அங்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]

Continue reading …

அம்பானி மருத்துவமனையில் ரிஷப்புக்கு சிகிச்சை!

Comments Off on அம்பானி மருத்துவமனையில் ரிஷப்புக்கு சிகிச்சை!

சில தினங்களுக்கு முன் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில், முதுகுப் பகுதியில், கால் முட்டியில் தசை நார் கிழிவு என […]

Continue reading …

பொங்கலுக்கு கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?

Comments Off on பொங்கலுக்கு கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர். ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வருவதால் முந்தைய தினங்கள் விடுமுறையாக இருப்பதால் பலரும் சொந்த ஊர்களுக்கு 12, 13ம் தேதிகளிலேயே புறப்பட தயாராகி வருகின்றனர். சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு செல்லவிருப்பதால் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னையிலிருந்து பல்வேறு வழித்தடங்களிலும் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட […]

Continue reading …

#தமிழ்நாடு ஹேஷ்டேக் டிரெண்ட்!

Comments Off on #தமிழ்நாடு ஹேஷ்டேக் டிரெண்ட்!

ஆளுநர் தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்று அழைப்பதே சரி என பேசியதற்கு எதிராக டுவிட்டரில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இந்து மத ரீதியாகவும், தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாகவும் பேசி வருகிறார். இவரது பேச்சு திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் ‘தமிழ்நாடு’ என்று மாநிலத்தின் பெயர் உள்ளது குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்று அழைப்பதே […]

Continue reading …

அஜீத் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on அஜீத் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜீத் நடிப்பில் “துணிவு” திரைப்படம் ரீலீசாவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. “துணிவு” திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. ஆனால் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில் ரசிகர்கள் குழப்ப நிலையில் இருந்தனர். ஒரு சிலர் “துணிவு” திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகுமென்றும், சிலர் ஜனவரி 12ம் தேதி வெளியாகுமென்றும் கூறி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சற்று முன்னர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில், “துணிவு” திரைப்படம் […]

Continue reading …