
கடந்த வாரம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சீதாராமம்!” வெளிவந்த இரண்டாவது வாரத்திலேயே அதிக தியேட்டர்களில் வசூலில் குவித்துள்ளது. “வாயை மூடி பேசவும்,” “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான். தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது துல்கர் சல்மானின் “சீதாராமம்” திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸானது. படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கருடன் ராஷ்மிகா […]
Continue reading …
பல வருடங்களுக்கு பிறகு உலக நாயகன் கமலஹாசனுக்கு நடிகர் சத்யராஜ் வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. “இந்தியன் 2” திரைப்படத்தில் நடிகர் சத்யராஜை நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் […]
Continue reading …
தொடர்ந்து பள்ளி மாணவிகள் தற்கொலை நிகழ்வுகள் நடந்து கொண்டே உள்ளது. தற்போது பிளஸ் 2 பள்ளி மாணவி பூச்சி மருத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மல்லிகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மாம்பலப்பட்டு என்ற பகுதியில் பள்ளியில் அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி, காலையில் வகுப்பில் மயங்கி விழுந்தார். உடனே பள்ளி ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் […]
Continue reading …
கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி இறந்து 30 நாட்கள் கடந்த நிலையில் அவரது தாயார் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார். இதுபற்றி அவர் ஸ்ரீமதியின் தாயார் கூறும்போது, “ஸ்ரீமதி இறந்து இன்றோடு 30 நாட்கள் ஆகிவிட்டது. இது திட்டமிட்ட கொலைதான். ஆனால் கொலை செய்தவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கிறது. எனவே ஒரு தாயின் உணர்வை புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திக்க உள்ளேன். […]
Continue reading …
டீக்கடையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் வானபாடி கிராமத்திலுள்ள செல்வராஜ் (58) என்ற நபருக்குச் சொந்தமான டீக்கடையில் சிலிண்டர் வெடித்தது. இவ்விபத்தில், ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவ்விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். தற்போது 5 பேர் வாலாஜா பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் விபத்து தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் […]
Continue reading …
சுமார் 1 லட்சம் டன் எடையுள்ள ரசாயன வெடிகுண்டுகள் பால்டிக் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1942 வாக்கில் நடைபெற்ற இரண்டாம் உலக போரில் ஹிட்லரின் ஜெர்மனியை எதிர்த்து நேச நாடுகள் கடுமையாக போர் தொடர்ந்தன. பதிலுக்கு ஜெர்மனியும் புதிய புதிய ஆயுதங்களை கண்டுபிடித்து உலக நாடுகளை திக்குமுக்காட செய்து வந்தது. 1945ல் இரண்டாம் உலகப்போர் ஜெர்மனியின் வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது. அப்போது நாஜிக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்கள், […]
Continue reading …
நடிகர் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான “தி க்ரே மேன்” படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹாலிவுட் இயக்குனர்கள் ரஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் ரியான் கோஸ்லிங், க்ரிஸ் எவான்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் “தி க்ரே மேன்.” இப்படத்தில் நடிகர் தனுஷும் நடித்திருந்தார். நெட்ப்ளிக்ஸில் வெளியான இப்படத்தில் தனுஷ் நடித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் சில காட்சிகள் மட்டுமே தனுஷ் வந்தது சிலருக்கு […]
Continue reading …
மத்திய அரசு விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே ஒதுக்கியுள்ளது. கடந்த ஜூலை 28ம் தேதி சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி விமர்சையாக நடைபெற்றது. ஆகஸ்டு 8ம் தேதி போட்டிகள் நிறைவடைந்தது. போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது. வெற்றிகள் தமிழகம் தருகின்ற போதிலும் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கு மக்கள் நீதி மய்யம் […]
Continue reading …
2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்து இருக்கிற அதிமுகவை ஒன்று சேர்த்து தேர்தலை சந்திப்போம் என்று சசிகலா பேட்டியளித்துள்ளார். அதிமுக கட்சியில் ஏற்பட்ட ஒற்றைத்தலைமை பிரச்னையில் இரண்டு பிரிவுகள் உருவாகிவிட்டது.இந்த போட்டியின் முடிவில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிச்சாமி மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அதிகாரத்திற்காக யாரை வேண்டுமானாலும் அழிக்க நினைப்பவர். வரும் காலத்தில் ஓ […]
Continue reading …
பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். “தலைவி” என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். மேலும் அவரது டுவிட்டுக்கள் சில சர்ச்சைக்குரியதாகவும் இருக்கும். அதற்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் இருக்கும். தற்போது நடிகை கங்கனா ரணாவத்துக்கு திடீரென டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வருவதாகவும் தகவல்கள் […]
Continue reading …