
மாவட்ட ஆட்சித் தலைவர் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் இன்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி என தெரிவித்துள்ளார். இதையடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைகளில் நல்ல மழை பெய்ததை அடுத்து குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, தேனருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்ததை அடுத்து திடீரென அருவியில் வெள்ளம் […]
Continue reading …
ராம்சரண் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். இவர் நடித்த சில தெலுங்கு படங்கள் தமிழ் டப்பிங்கிலும் வெளிவந்துள்ளன. தற்சமயம் இவர் தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கும் திரைப்படம் “வாடிவாசல்.” எழுத்தாளர் சி.சு செல்லப்பா எழுத்தில் உருவான வாடிவாசல் நாவலை தழுவி இந்த படத்தை இயக்க இருக்கின்றனர். இதில் கதாநாயகர்கள் மாற போவதாக வெகு நாட்களாகவே பேச்சுக்கள் இருந்து வந்தன. […]
Continue reading …
முன்னாள் பிரதமரான தேவகவுடா ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கி தலைமறைவாகியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு தாத்தாவாகிய முன்னாள் பிரதமரான தேவகவுடா எச்சரிக்கையில், ‘சட்ட ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. பிரஜ்வால் ரேவண்ணா மீது தவறு இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம். பொதுமக்கள் என்னையும், என் குடும்பத்தையும் திட்டி தீர்க்கிறார்கள், எல்லாம் என் கவனத்திற்கு வந்தது, பொறுமைக்கும் எல்லை உண்டு” என பேரனுக்கு […]
Continue reading …
கூட்டுறவுத்துறை எச்சரிக்கை நியாய விலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை, 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல், 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்பட கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 […]
Continue reading …
ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவர் திருநாள் விழா” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அதில், காவி உடையுடன் திருவள்ளுவரின் படம் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த ஜனவரி மாதம் காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளப்பின. தற்போது மீண்டும் இதுபோன்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் “திருவள்ளுவர் […]
Continue reading …
‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். பணி நிமித்தமாக நாங்குநேரி வந்த காவலர் ஒருவர், அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்தார். மேலும் டிக்கெட் எடுக்க சொன்ன பேருந்தின் நடத்துனரிடம் அந்த காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டிக்கெட் எடுக்க முடியாது என கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. காவலர்கள் சீருடையில் நீதிமன்றம் உள்ளிட்ட நீண்ட தூரம் செல்லும் […]
Continue reading …
டெல்லியில் ஏசி பேருந்துகளை இயக்குவதற்கு மாநில அரசு ஊபர் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஊபர் நிறுவனம் இதுகுறித்து, “உள்ளூர் அளவில் செயல்பட்டு வரும் வாகன பார்ட்னர்களுடன் இந்த ஏசி பேருந்துகள் இயக்கப்படும், 19 முதல் 50 பயணிகள் வரை இந்த ஏசி பேருந்தில் பயணம் செய்ய முடியும். உபர் செயலின் மூலம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பயனர்கள் தங்களுக்கு விருப்பமான வழித்தடத்தையும் தேர்வு செய்து […]
Continue reading …
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டதிலிருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பாஜகவுக்கு எதிராக அவர் ஆவேசமாக பேசி வருகிறார். ஒடிசாவில் தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு தமிழ்நாடு […]
Continue reading …
ஓசி பீடி கொடுக்காத ஆத்திரத்தில் கட்டிட தொழிலாளி ஒருவர் கொலை செய்துள்ளார். மதுரை மாவட்டம் ஏஞ்சல் நகரைச் சேர்ந்த 65 வயது கட்டிட வேலை செய்பவர் நடைமேடையில் உறங்கியுள்ளார். அவரிடம் அதே பகுதியில் வேலை பார்க்கும் ஒருவர் ஓசி பீடி கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் ஓசி பீடி கொடுக்கவில்லை என்பதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஓசி பீடி கொடுக்காத ஆத்திரத்தில் தன்னிடம் சண்டை போட்ட கட்டிட வேலை […]
Continue reading …
திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருவுருவச் சிலையானது நிறுவப்பட்டிருந்தது. மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி அந்த இடத்தில் இருந்து இந்த சிலையை அகற்றி அதனை வேறு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று கூறப்பட்டிருந்து. திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எம்.எல்ஏ மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் வேறு இடத்தில் நிறுவ வேண்டும் என்று மனு அளித்தார். அப்போது மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் […]
Continue reading …