Home » Posts tagged with » Netrikkan (Page 510)

13ம் தேதி ரேசன் கடை ஸ்டிரைக்!

Comments Off on 13ம் தேதி ரேசன் கடை ஸ்டிரைக்!

13ம் தேதி முதல் ரேசன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரிபவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பொது மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக மாற்று பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகள் செயல்படுவதை […]

Continue reading …

ராயல் என்பீல்ட் பைக் தீப் பிடித்தது!

Comments Off on ராயல் என்பீல்ட் பைக் தீப் பிடித்தது!

ராயல் என்பீல்ட் பைக் ஒன்று சென்னையில் இன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வள்ளுவர் கோட்டம் சாலையில் இளைஞர் ஒருவர் ராயல் என்பீல்டு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வண்டியிலிருந்து புகை வந்ததால் அவர் வண்டியை விட்டு கீழிறங்கினார். அப்போது உடனே வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்து இளைஞரும் உடனிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். அருகே இருந்த ஹோட்டலில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். அதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. வாகனம் […]

Continue reading …

மிதாலி ராஜ் ஓய்வு!

Comments Off on மிதாலி ராஜ் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டில் தலைசிறந்த கேப்டனாக விளங்கியவர் மிதாலி ராஜ். தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவர். இதுவரை 12 டெஸ்ட், 89-டி-20, 232 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது 23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு சாதனைகளைப் படைத்து பல வீராங்கனைகளுக்கு முன்னோடியாக இருக்கும் இவர், டெஸ்ட் போட்டியில் 699 ரன்களும், ஒரு நாள் போட்டிகளி 7,805 ரன்களும், டி-20 போட்டிகளில் 2364 […]

Continue reading …

விஜய் சேதுபதிக்கு என்ன பரிசு?

Comments Off on விஜய் சேதுபதிக்கு என்ன பரிசு?

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கார், நடிகர் சூர்யாவுக்கு கார், துணை இயக்குனர்களுக்கு இரு சக்கர வாகனம் என்று உலகநாயகன் கமலஹாசன் பரிசுகளை வழங்கி வருகிறார். ஜூன் 3ம் தேதி வெளியாக அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “விக்ரம்.” இத்திரைப்படம் பேன் இந்தியா அனைத்து ரசிகர்களிடமும் பேசப்பட்டு வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது. 5 நாட்களில் உலகளவில் 250 கோடி வசூலை எட்டியுள்ளது. படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் குஷியான கமல்ஹாசன் படக்குழுவினருக்கு பரிசுகளை வாரி வழங்கி வருகிறார். இயக்குனர் […]

Continue reading …

சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்!

Comments Off on சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்!

40 சதவீதம் மக்கள் தொகையை சீனா ஒவ்வொரு தலைமுறையிலும் இழக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். உலக பணக்காரர்களின் முக்கியமான எலான் மஸ்க் வெளியிடும் பல அறிக்கைகள் விவகாரமாகவே அமைகிறது. அவ்வகையில் மக்கள் தொகை பற்றிய அவரது கூறிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவகிறது. அதை கட்டுப்படுத்த பலரும் பேசி வரும் நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முயல்வது மக்கள்தொகை வீழ்ச்சியோடு நாகரிகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். […]

Continue reading …

சாலை போடுவதில் கின்னஸ் சாதனை!

Comments Off on சாலை போடுவதில் கின்னஸ் சாதனை!

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 75 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையை 105 மணி நேரத்தில் அமைத்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. அமராவதி மற்றும் அகோலா இடையே 75 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மிகவும் குறைந்த நேரத்தில், அதாவது 105 மணி 33 நிமிடங்களில் அமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. NHAI-ன் 800 பணியாளர்கள் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 720 பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து பணிபுரிந்து இச்சாதனையை முடித்துள்ளனர். […]

Continue reading …

செய்தியாளர் மீது தாக்குதல் முயற்சி!

Comments Off on செய்தியாளர் மீது தாக்குதல் முயற்சி!

சென்னையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் செய்தியாளர் சந்திப்பில் புதியதலைமுறை செய்தியாளர் ரா. ஆனந்தன் மீது தாக்குதல் முயற்சி செய்துள்ளது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று (07-06-2022) செவ்வாய்க்கிழமை காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் நட்சத்திர ஹோட்டலில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்றிருந்தார் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் திரு.ரா.ஆனந்தன். செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் […]

Continue reading …

உலகநாயகனின் அடுத்த படப்பிடிப்பு எப்போது?

Comments Off on உலகநாயகனின் அடுத்த படப்பிடிப்பு எப்போது?

“விக்ரம்” திரைப்படம் வசூலை அள்ளிக் கொடுத்துள்ளது. மக்கள் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கமலஹாசன் நடித்து பாதியில் படப்பிடிப்பு நின்று போன திரைப்படங்களை எல்லாம் தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர் திரைத்துறையினர். இதன் முதல் கட்டமாக “இந்தியன் 2” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கடந்த ஆறு வருடங்களாக முன் முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பின் கிடப்பில் போடப்பட்ட “சபாஷ் நாயுடு” படத்தின் படப்பிடிப்பையும் […]

Continue reading …

சன்பிக்சர்ஸ் வெளியிட்ட அப்டேட்

Comments Off on சன்பிக்சர்ஸ் வெளியிட்ட அப்டேட்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள “திருச்சிற்றம்பலம்“ என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இப்படத்தை பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் தனுஷின் ஜோடியாக நித்யாமேனன், பவானி சங்கர், ராஷிகண்ணா ஆகிய மூன்று கதாநாயகிகள் ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி உள்ளார். இத்திரைபடத்திற்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு அனிருத் இசையமைத்து வருகிறார். படம் ஜூலை 17ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. […]

Continue reading …

இளைஞர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி!

Comments Off on இளைஞர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி!

1000 மீனவ இளைஞர்களுக்கு கடலில் மூழ்கி தவிப்பவர்களைப் பாதுகாப்பதற்காக 14 கடலோர மாவட்டங்களில் உயிர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 1000 மீனவ இளைஞர்களுக்கு உயிர் பாதுகாப்பு மீட்பு பயிற்சி திட்டத்தை இன்று துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பேரிடர் நேரத்தில் கடலில் தவிப்பவர்களை பத்திரமாக மீட்கும் இப்பயிற்சி திட்டத்திற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Continue reading …