நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுங்கானா மாநிலத்தின் ஆளும் கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக போவதாக கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும் அவ்வப்போது தொடர்ந்து அரசியல் கருத்துகளைப் பேசி வருகிறார். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அவர் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் ஆளும் கட்சியான ராஷ்ட்ரிய சமிதி கட்சி பிரகாஷ் ராஜை ராஜ்ய சபா எம்பியாக்க போவதாக கூறப்படுகிறது.
Continue reading …நான்கு புதிய அமைச்சர்களுடன் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே முன்னிலையில் பதவிபிரமாணத்துடன் நடைபெற்றது. மக்கள் போராட்டம் காரணமாக மஹிந்த ராஜபக்சே மே 9ம் தேதி பதவி விலகியபின், ரணில் விக்ரமசிங்க மே 12ம் தேதி இலங்கை பிரதமராகப் பதவியேற்றார். அவர் மட்டுமே பதவியேற்ற நிலையில் அவரது அமைச்சரவையில் நான்கு பேர் இன்று இணைந்தனர். இந்த பதவி பிரமாண நிகழ்வு கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று, (14) முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் […]
Continue reading …இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். இன்று, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதேபோல், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தினரிடன் கோரிக்கையை ஏற்று, சிவாஜி மணிமண்டபத்தின் வெளிப்புறத்தில் சிலையை நிறுவுவதற்கான இடத்தையும் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
Continue reading …பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் லாட்டரியை ஒழித்து 18 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அதன் வேதனை தொடர்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுபற்றி கூறும் போது, “ஈரோடு எல்லப்பாளையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற நூல் வணிகர் கள்ள லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்ததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த செய்தி வேதனையளிக்கிறது. இதுகுறித்து காணொலி வாக்குமூலமும் வெளியிட்டுள்ளார்! தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் ஆகி விட்டன. அதன்பிறகும் லாட்டரி […]
Continue reading …மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறை நீர் முகாம் சென்னையில் 18வது மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதில், மக்கள் தங்கள் ரேசன் கார்டுகளில் திருத்தம் செய்வது மற்றும் மேலும் மற்ற குறைகளை சொல்வது போன்றவை நடைபெற்றன. இதில் மக்கள் கலந்து கொண்டு பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.
Continue reading …ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித் நடித்துவரும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ஏற்கனவே மஞ்சு வாரியர் ஜான் கொகைன் உட்பட ஒருசிலர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இளம் தமிழ் ஹீரோக்களில் ஒருவரும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் ஆதி ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று வைரலானதை அடுத்து அஜித் 61 படத்தில் ஆதி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு […]
Continue reading …மத்திய அரசு கோதுமை ஏற்றுமதியை தடை செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோதுமை விலை ஏறிக்கொண்டு வருவதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கோதுமை ஏற்றுமதி தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் பிற […]
Continue reading …டெல்லியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 30 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரையிலும் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு சிலர் காயமடைந்துள்ளதாகவும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு […]
Continue reading …கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை […]
Continue reading …உயர் கல்வி அமைச்சர் பொன்முடி புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை பின்பற்ற தயார் என்று அறிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்ற தயாராக இருக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் மாநில கல்வி கொள்கையையும் பின்பற்றி வருவோம். எங்கள் உணர்வுகளை கவர்னரின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். மேலும் நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை. இந்தி திணிப்பு தான் வேண்டாம் என்பதையே ஆளுநர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். சர்வதேச மொழியான […]
Continue reading …