
ஷவர்மா என்ற உணவை சாப்பிட்ட பள்ளி மாணவி கேரள மாநிலம் காசர்கோட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூர் எனும் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி தேவநந்தா. உறவினர் வீட்டில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். தேவநந்தாவும் அவருடன் பள்ளியில் படிக்கும் 17 மாணவர்களும் சேர்ந்து கரிவலூரில் உள்ள துரித உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். அடுத்த சில […]
Continue reading …
இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் இலங்கை மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு படகில் வர முயன்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் மற்றும் படகோட்டிகள் இருவர் உட்பட 14 பேரை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக திருகோணமலையை சேர்ந்த 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் என 3 குடும்பத்தை சேர்ந்த 12 நபர்கள் மற்றும் மன்னாரை சேர்ந்த படகோட்டிகள் இருவர் ஒரு பைபர் படகில் […]
Continue reading …
டெல்லி அரசு ஏற்கனவே பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லை என்று அறிவித்திருந்தது. தற்போது கட்டுமான தொழிலாளர்களுக்கும் டிக்கெட் இல்லை என அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது டெல்லியில் ஆட்சி நடத்திவரும் ஆம் ஆத்மி கட்சி தான். தற்போது மகளிர்களை அடுத்து டெல்லியில் உள்ள கட்டுமான தொழிலாளர்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தகவல் தெரிவித்துள்ளார். இதனால் 10 லட்சம் […]
Continue reading …
அடுத்த இரண்டு நாட்களில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து குளிர்காலமும் முடிந்து வெயில்காலம் தொடங்கி விட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் அரிதாக கடந்த மார்ச் மாதம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி தமிழகம் நோக்கி வந்தது. இதனால் சில பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது.
Continue reading …
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சென்னை பேருந்துகள் குறித்த முழு விபரங்களையும் தெரிந்து கொள்வதற்காகவே “சென்னை பஸ்” என்ற புதிய ஆப்பை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறும்போது, “இந்த ஆப்பை ஆண்ட்ராய்டு மொபைலில் டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு வரும் பேருந்துகள் எப்போது வரும்? எப்போது செல்லும்? தற்போது எங்கு உள்ளது? எத்தனை நிமிடம் கழித்து வரும் போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம். […]
Continue reading …
சூர்யா “வாடிவாசல்” திரைப்படத்தை பற்றிய அதிரடி முடிவை எடுத்துள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்துவதற்கு தாமதமாகும் என்று செய்தி வெளியாகி உள்ளது. தற்போது பாலா இயக்கத்தில் ’சூர்யா 41’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’ படத்தில் பிஸியாக இருப்பதால் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என தெரிகிறது. […]
Continue reading …
நகைக்கடைகளில் இன்று அட்ஷய திருதியை என்பதால் மக்கள் பலர் நகை வாங்க வருவார்கள் என்ற காரணத்தினால் நகைக்கடைகளில் ஏற்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அட்ஷய திருதியை கொண்டாடப்படும் நிலையில் தங்கம் வாங்கினால் அது மேன்மேலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்று அட்ஷய திருதியையில் நகைவாங்க உகந்த நேரமாக காலை 5.49 முதல் மதியம் 12.13 வரை குறிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் நகை வாங்க அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என்பதால் நகைக்கடைகள் பல விடியற்காலை […]
Continue reading …
உலக நாடுகள் பலவும் மீண்டும் கண்டறியப்பட்டுள்ள எபோலா வைரஸினால் அதிர்ச்சி உள்ளாகி இருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்தே உலகம் முழுவதும் மீளாத நிலையில் மீண்டும் தற்போது எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிற்கு முன்னர் மக்களை உலுக்கிய மோசமான வைரஸ் தொற்றுகளில் முக்கியமானது எபோலா வைரஸ். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் கடந்த சில ஆண்டுகளில் பல உயிர்களை பலி கொண்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு காங்கோவில் ஏற்பட்ட எபோலா […]
Continue reading …
டிஜிபி சைலேந்திரபாபு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். சமீபத்தில் விசாரணை கைதிகள் சிலர் காவல் நிலையத்தில் உயிரிழந்தனர். அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு சாத்தான்குளத்தில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட இருவர் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியினால் அவதிப்படும் மக்களுக்கு தேவையான உதவி செய்வதற்காக தாராளமாக நன்கொடை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நன்கொடைகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் நன்கொடை வழங்க வேண்டிய வங்கி கணக்கு எண்ணையும் […]
Continue reading …