Home » Posts tagged with » Netrikkan (Page 86)

ரூ.5900 கோடியை என்ன செய்தார்கள்? நிர்மலா சீதாராமன்

Comments Off on ரூ.5900 கோடியை என்ன செய்தார்கள்? நிர்மலா சீதாராமன்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று கூறி வருகின்றனர். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.5900 கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது. அதை என்ன செய்தார்கள்? என்று தமிழக அரசு கணக்கு கூற வேண்டும்” என்று பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவரது பேட்டியில், “மத்திய அரசு சென்னைக்கு 5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளது. […]

Continue reading …

பாடம் கற்றுக்கொண்ட விஜய் தேவரகொண்டா!

Comments Off on பாடம் கற்றுக்கொண்ட விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டாராக உருவாகி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான “அர்ஜுன் ரெட்டி” உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பேன் இந்தியா படமான “லைகரி”ல் நடித்தார். ஆனால் அத்திரைப்படம் படுதோல்வியைத் தழுவியது. “லைகர்” படத்துக்குப் பின் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக “குஷி” திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது விஜய் தேவரகொண்டா பரசுராம் இயக்கத்தில் ‘பேமிலி ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மிருனாள் […]

Continue reading …

ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி போட்டியிடும் தொகுதி?

Comments Off on ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி போட்டியிடும் தொகுதி?

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஆந்திர மாநிலத்தில் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக 18வது மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி தேர்தல் […]

Continue reading …

வனிதா விஜயகுமார் மகன் ஹீரோவாகிறார்!

Comments Off on வனிதா விஜயகுமார் மகன் ஹீரோவாகிறார்!

விரைவில் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா திரைவுலகில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய மகன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வனிதா விஜயகுமார் மற்றும் அவரது முன்னாள் கணவர் ஆகாஷ் ஆகியோருக்கு பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரி. 22 வயதான இவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக போகிறார். இவரது முதல் படத்தை பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு இளம் காதலர்களின் கதையம்சம் […]

Continue reading …

சஞ்சய் சிங்குக்கு ஜாமின்!

Comments Off on சஞ்சய் சிங்குக்கு ஜாமின்!

ஆம் ஆத்மி எம்பி., சஞ்சய் சிங் டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டில்லி துணைமுதலமைச்சர் மணீஸ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவும் இவ்வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் […]

Continue reading …

எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300 பேர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு!

Comments Off on எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300 பேர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு!

அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் உள்பட 300 பேர் மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனுமதி இன்றி கூட்டம், பிரச்சாரம் செய்பவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு […]

Continue reading …

இயக்குனர் அமீரிடம் 5 மணி நேரம் விசாரணை!

Comments Off on இயக்குனர் அமீரிடம் 5 மணி நேரம் விசாரணை!

திரைப்பட இயக்குனர் அமீர் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு இன்று ஆஜரானார். ஜாபர் சாதிக் ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார். ஜாபர் சாதிக்கின் நண்பரான இயக்குனர் அமீர் இன்று ஆரஜாக சம்மன் அனுப்பப்பட்டது. டில்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தன் வழக்கறிஞர் பிரபாகரனுடன் ஆஜரானார். அப்போது, ஜாபர் சாதிக்குடன் உள்ள தொடர்பு பற்றி அமீரிரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. போதை […]

Continue reading …

பாமகவை விமர்சித்த ஜெயக்குமார்!

Comments Off on பாமகவை விமர்சித்த ஜெயக்குமார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராமதாசுக்கு சீட் பேரம் தான் முக்கியம் என்று விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஜெயலலிதா இல்லை என்றால் பாமக வெளியே தெரிந்திருக்காது. எங்கள் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் பாமகவினர், பாமக தொண்டர்களே அதிமுகவுடன் கூட்டணி வைக்க தான் விரும்பினார்கள். பேரம் அதிகமாகும் இடத்தில் தான் ராமதாஸ் உடன்படுவாறே தவிர கொள்கையாவது, கூட்டணியாவது, வெங்காயமாவது, எதுவுமே அவருக்கு கிடையாது. பாமகவுக்கு அங்கீகாரம் கொடுத்தது, அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது அதிமுக தான். […]

Continue reading …

சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல்!

Comments Off on சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல்!

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து வருபவர். இவர் நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் மனைவி. சரண்யா பொன்வண்ணனுக்கும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரருக்கும் கார் நிறுத்துவது தொடர்பாக சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையின் போது சரண்யா பொன்வண்ணன் பக்கத்து வீட்டுக்காரரை கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீதேவி என்ற பெண் சிசிடிவி […]

Continue reading …

மூன்றே நாளில் வசூலை அள்ளி குவித்த “ஆடுஜீவிதம்!”

Comments Off on மூன்றே நாளில் வசூலை அள்ளி குவித்த “ஆடுஜீவிதம்!”

மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவல். இந்நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ப்ளஸ்ஸி இயக்கியுள்ளார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இத்திரைப்படம் மார்ச் 28ம் தேதி ரிலீசானது. கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு ஆடு மேய்ப்பவராக பாலைவனத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர் வாழ்க்கை […]

Continue reading …