
4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும் என்று வருடாந்திர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதிநடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி […]
Continue reading …
தமிழ் சினிமாவில் நடிகர் டேனியல் பாலாஜி முக்கியமான நடிகர்களில் ஒருவர். சித்தி தொலைக்காட்சி சீரியல் மூலமாக அறிமுகமானவர். பின் “காக்க காக்க,” “வேட்டையாடு விளையாடு” மற்றும் “பொல்லாதவன்” ஆகிய படங்களில் தன் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தவர். தொடர்ந்து வெற்றிமாறனின் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். தமிழ் தவிர்த்து பிற தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வந்தார். இப்போது சில படங்களில் நடித்து வரும் அவர் திடீரென மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். கொட்டிவாக்கத்தில் […]
Continue reading …
‘ஆடு ஜீவிதம்’ நாவல் மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதியது. இந்நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ப்ளஸ்ஸி இயக்கியுள்ளார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இத்திரைப்படம் மார்ச் 28ம் தேதி ரிலீசானது. கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு ஆடு மேய்ப்பவராக பாலைவனத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர் வாழ்க்கை […]
Continue reading …
“கங்குவா” திரைப்படம் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்துக்குப் பிறகு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் “புறநானூறு” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்போது அந்த படம் […]
Continue reading …
பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தேர்தல் விதிகளை மீறியதாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தருமபுரி மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். மேட்டூர் அருகே உள்ள மேச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் […]
Continue reading …
இயக்குனர் அமீர் “ஆதிபகவன்” படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். “வடசென்னை” படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அதிக படங்களில் நடித்து வருகிறார். அரசியல் கதைக்களம் கொண்ட படமாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் ஆதம் பாவா இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை “மாநாடு” தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கைப்பற்றியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் ரிலீசாகவில்லை. […]
Continue reading …
கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தாமோதரன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் எளிமையாக நடத்தப்பட்டது. மே 1ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக கொண்டாட ஷங்கர் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். அதையடுத்து திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார் ஷங்கர். ஆனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது. இடையில் ஐஸ்வர்யா- தாமோதரன் தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக […]
Continue reading …
சமீபத்தில் நடிகர் விஜய் தனது கடைசி படத்தின் நடிப்பை முடித்துவிட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அவர் தற்போது நடித்து வரும் “கோட்” திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ளது. இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக […]
Continue reading …
வரும் ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் சமீபத்தில் முடிவடைந்தது. வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் வாபஸ் பெற்றுக்கொள்ள இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஒவ்வொரு தொகுதிகளிலும் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது. 39 தொகுதிகளில் 1749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலனை […]
Continue reading …
ஆன்லைன் மூலமாக மக்கள் தேவைகளுக்கான பொருட்களை ஆர்டர் செய்கின்றனர். அதுபோல் ஒருவர் பிளிப்கார்ட் செயலி மூலம் ரூ.22,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தார். அவருக்கு வந்த பார்சலில் கல் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பிளிப்கார்ட் நிறுவனம் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் பகுதியில் உள்ள ஒருவர் ரூ.22,000 மதிப்புள்ள மிஸீயீவீஸீவீஜ் ஞீமீக்ஷீஷீ 30 5நி என்னும் ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் செயலியில் ஆர்டர் செய்துள்ளார். அதே நாளில் ஆர்டர் டெலிவரி செய்யப்பட்ட […]
Continue reading …