Home » Posts tagged with » Netrikkan (Page 97)

ஓபிஎஸ் பேச்சை நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி!

Comments Off on ஓபிஎஸ் பேச்சை நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி!

பிரதமர் மோடி சேலத்தில் நடைபெற்றுவரும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பாஜக நிர்வாகி அவரை பேச்சை நிறுத்த சொல்லிவிட்டு பாரத் மாதா கி ஜே என முழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கூட்டத்தில் டிடிவி தினகரன், வாசன், ஓ பன்னீர்செல்வம், டாக்டர் ராமதாஸ், ஜான் பாண்டியன், சரத்குமார் உள்ளிட்ட பாஜக தலைவரும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர் செல்வம் இந்த […]

Continue reading …

சின்னம் கிடைத்ததால் பாமகவினர் மகிழ்ச்சி!

Comments Off on சின்னம் கிடைத்ததால் பாமகவினர் மகிழ்ச்சி!

பாமக மாம்பழம் சின்னத்தை கேட்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தது. அக்கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அங்கீகாரம் பெறாத கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாங்கள் போட்டியிடும் சின்னத்தை விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி வருகிறது. பாமக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற தரத்தை இழந்தது. மீண்டும் மாம்பழம் சின்னத்தை விண்ணப்பித்திருந்த நிலையில் அது குறித்த பரிசீலனை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. கடந்த […]

Continue reading …

பிரேமலதா முக்கிய அப்டேட்!

Comments Off on பிரேமலதா முக்கிய அப்டேட்!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தேமுதிக மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாஜக, அதிமுக கொடுக்க முன் வராததால் இன்னும் கூட்டணி இழுபறி தொடர்கிறது. இதற்கிடையே அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் […]

Continue reading …

மத்திய அரசின் நிதியை வீணடிக்கும் திமுக; பிரதமர் மோடி

Comments Off on மத்திய அரசின் நிதியை வீணடிக்கும் திமுக; பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிப்பதாகவும், இந்து மதத்திற்கு எதிராக திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, “பாமகவின் வருகையால் தேசிய ஜனநாயக கூட்டணியின் கரம் வலுவடைந்துள்ளது. இந்து தவிர வேறு மதங்களை இந்தியா கூட்டணியினர் அவமதிப்பதில்லை, இந்து மதத்திற்கு எதிராக திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் செயல்படுகின்றனர். இந்து தர்மத்தை அழிப்பது மட்டுமே இந்தியா கூட்டணி நோக்கமாக உள்ளது, சக்தியை […]

Continue reading …

நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜக கடும் விமர்சனம்!

Comments Off on நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜக கடும் விமர்சனம்!

நடிகர் பிரகாஷ்ராஜ் பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பேசுவது திமிர்த்தனம் என்றும் ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். பிரதமர் மோடி சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 420 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசினார். இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் “420 மோசடி பேர்வழிகள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என […]

Continue reading …

டிஆர் பாலு விளக்கம்!

Comments Off on டிஆர் பாலு விளக்கம்!

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒரே ஒரு நிறுவனத்திடம் மட்டும் இருந்து 59 கோடி ரூபாய் திமுக வாங்கி உள்ளதாக வெளியான செய்தி குறித்து விளக்கமளித்துள்ளார். அவ்விளக்கத்தில், “திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளோம். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் திமுக ஆட்சியில் […]

Continue reading …

மலேசிய பிரமுகரால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சியா?

Comments Off on மலேசிய பிரமுகரால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சியா?

மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளதாகவும் இதனால் தமிழ் திரை உலகினர் பீதியாகி உள்ளனர். சாதிக்குடன் தொடர்பில் இருந்த மலேசிய பிரமுகர் தமிழ் திரையுலகில் பட விநியோகம் பைனான்ஸ் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததாகவும் அவருக்கு இன்னொரு முகம் இருப்பதாகவும் அந்த முகம் குறித்து தான் தற்போது மத்திய போதை தடுப்பு […]

Continue reading …

நடிகர் ராதாரவி மீண்டும் வெற்றி!

Comments Off on நடிகர் ராதாரவி மீண்டும் வெற்றி!

நடிகர் ராதாரவி தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராஜேந்திரன், சற்குணராஜ் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். நேற்று வாக்குப்பதிவு நடைபெற்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டது. மொத்தம் பதிவான 1021 வாக்குகளில் ராதாரவி 662 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரனுக்கு […]

Continue reading …

ஆபத்தான ரீல்ஸ் செய்த பிரபலம் கைது!

Comments Off on ஆபத்தான ரீல்ஸ் செய்த பிரபலம் கைது!

இளைஞர் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக குளத்தில் தீ வைத்து அதில் குதித்து சாகசம் செய்த வீடியோ வைரலானது. அவரையும், அவரது நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் இளைஞர்களிடையே தலைவிரித்தாடுகிறது. தங்கள் ரீல்ஸை அதிக லைக்ஸ் பெற வைப்பதற்காகவும், ஃபாலோவர்களை அதிகரிப்பதற்காகவும் ஆபத்தான பல சாகசங்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியான சம்பவம் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் புத்தந்தருவை குளத்தில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்துள்ளார்கள் இளைஞர்கள் சிலர். […]

Continue reading …

5வது முறையாக மீண்டும் அதிபரான புதின்!

Comments Off on 5வது முறையாக மீண்டும் அதிபரான புதின்!

ரஷ்ய அதிபர் தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் புதின். இதையடுத்து அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 1999ம் ஆண்டு முதல் ரஷ்யாவில் தலைவராக புதின் இருந்து வருகிறார். புதிய அதிபரை தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் மீண்டும் புதின் அபார வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட 88 சதவீதம் […]

Continue reading …