
ரஷ்ய அதிபர் தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் புதின். இதையடுத்து அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 1999ம் ஆண்டு முதல் ரஷ்யாவில் தலைவராக புதின் இருந்து வருகிறார். புதிய அதிபரை தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் மீண்டும் புதின் அபார வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட 88 சதவீதம் […]
Continue reading …
மார்ச் 22ம் தேதி 2024ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணி மோத உள்ளது. சென்னையில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இம்முறை ஆன்லைனில் தான் முழுக்க முழுக்க டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருந்தனர். கண்டிப்பாக அனைவருக்கும் டிக்கெட் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இன்று காலை 9.30 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஒரு சில நிமிடங்களில் […]
Continue reading …
சமீபத்தில் டில்லியில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் இன்று சென்னை அழைத்து வரப்பட்டதாகவும் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் டில்லியில் மூன்று தமிழர்கள் போதைப் பொருளுடன் கைதானார். இக்கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என தெரிய வந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் அவர் டில்லியில் கைது செய்யப்பட்டார். அவரை […]
Continue reading …
தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் அந்த பதவியை ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழிசை சௌந்தர்ராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் மக்களவை தேர்தலுக்கான பணிகளை பாஜக தொடங்கியது முதலே தமிழிசை தான் எம்.பியாக போட்டியிட விரும்புவது குறித்து தொடர்ந்து பாஜக மேலிடத்திடம் பேசி வந்தார். அவர் புதுச்சேரியில் போட்டியிட விருப்பப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி […]
Continue reading …
தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி நுழைய முடியாது என்றும் வடநாட்டில் மட்டுமே ஜெயிக்க முடியும் என்றும் கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில் தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா வலுவாக கால் ஊன்ற வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி நேற்று வெளியான கருத்துக்கணிப்பில் கர்நாடக மாநிலத்தில் அபார வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 28 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஆளும் காங்கிரஸ் […]
Continue reading …
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமான அளவில் குறைக்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த போது கூட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபத்தை பெற்று வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக […]
Continue reading …
“கங்குவா” திரைப்படம் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தில் தன்னுடையக் காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி […]
Continue reading …
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தளுகை பாதர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷின் மனைவி ராணி (50). கணவன் மனைவி இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் தங்களது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இதில் எதிர்பாராத விதமாக திருப்பத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் ராணி பலத்த காயமடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் […]
Continue reading …
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட நடிகை ஜோதிகா, பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்தார். பின்னர் “36 வயதினிலே” படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்தவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக “காதல்” திரைப்படத்தில் நடித்தார். அப்படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது. பாலிவுட்டில் “ஷைத்தான்” படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்தார். இப்படத்தை சூப்பர் 30 படத்தை இயக்கிய விகாஸ் பால் இயக்கினார். […]
Continue reading …
காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியில், “வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தையை கடத்துவதற்காக நுழைந்துள்ளதாக வாட்ஸ் ஆப் மூலம் தகவல் வந்துள்ளது முழுக்க முழுக்க வதந்தி. இது குரல் பதிவுகளாக பரவி வருகிறது. கோவை மாவட்ட காவல்துறை சார்பில் இதனை 100% முழுக்க முழுக்க வதந்தி என கூற முடியும். இதை யாரும் நம்ப வேண்டாம். கூறியதுடன் வட மாநிலத்திலிருந்து கோவையில் நிறைய பேர் தொழில் […]
Continue reading …