9 வயது சிறுமி புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.அவரது உடல், பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. 9 வயது சிறுமி புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி கொலை வழக்கில் முதியவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் மீது போக்சோ, வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுமி கொலை வழக்கு விவகாரத்தில், சிறப்பு குழு […]
புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இந்தியாவை பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான செயல் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “பாரத தேசம் என்பது பெருமையை சேர்க்கும் ஒன்று என்றும் ஆங்கிலேயர்களின் சாயல் எங்கு எங்கு இருக்கிறதோ அதை கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வேண்டும். அதன் காரணமாக பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசிவிட்டு மறுபடியும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். […]
Continue reading …கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததை அடுத்து மாவட்ட கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காரைக்கால் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த ராஜசேகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதிய காரைக்கால் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரியாக விஜய மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை […]
Continue reading …பல்வேறு சினிமா கெட்டப்புகளில் புதுச்சேரி யூனியனின் முதலமைச்சர் என்.ஆர்.ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் அவருக்கு பேனர் வைத்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரி யூனியனின் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இன்று முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சி ஆதரவாளர்கள் புதுச்சேரியில் “பத்து தல” படத்தில் சிம்பு நடித்த ஏஜிஆர் முதல், புஷ்பா, சந்திரமுகி வேட்டையன் ராஜா வரை பல கெட்டப்புகளில் அவரது புகைப்படத்தை […]
Continue reading …புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதை அடுத்து 9 சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு வேலை நாள் என அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் கோடை விடுமுறை முடிந்து வெயில் கடுமையாக தொடர்ந்து இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடும் வெயிலால் புதுவையில் பள்ளிகள் திறக்கும் தேதி ஒதுவைக்கப்பட்டதால் அதனை ஈடு செய்ய ஜூன் 24ம் தேதியில் இருந்து அக்டோபர் 10ம் தேதி வரை 9 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Continue reading …திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையில் குவாட்டர் பாட்டில் வைத்து விருந்தினர்களுக்குக் கொடுத்த நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த மே 28ம் தேதி, வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது, தாம்பூல பையில் ஒரு குவாட்டர் பாட்டிலையும் வைத்து விருந்தினர்களுக்கு பெண் வீட்டார் கொடுத்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தாம்பூல பையில் குவாட்டர் பாட்டிலை எடுத்து வைப்பதை பார்த்த விருந்தினர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். இதற்கு […]
Continue reading …அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பணிச் சலுகை வழங்குவதாக புதுசை அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் அரசுத் துறைகளில் பணியாற்ற்றும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று காலை நேரம் 2 மணி நேரம் பணி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிச்சலுகை அறிவிப்பை இன்று முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கவர்னர் தமிழிசை கூட்டாக அறிவித்தனர். இதற்கான அரசாணை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், வெள்ளிக்கிழமை தோறும் பெண்களின் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜை செய்ய வெள்ளிக்கிழமைகளில் காலை […]
Continue reading …புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமென மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக புதுவை மற்றும் தமிழ்நாடு முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி மாவட்ட கலெக்டர், “பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களான […]
Continue reading …புதுச்சேரி சட்டமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். சமீபத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்திக்கு தகுதி நீக்கத்தை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் செய்ததால் மாலை வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பாண்டிச்சேரியில் சட்டமன்ற கூட்டத்தொடர் காலை தொடங்கிய போது ராகுல் […]
Continue reading …புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி எங்களுக்கு அதிகாரமும் இல்லை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லை என வேதனையுடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் புதுவை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகியது. புதுவை மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னரே தாக்கல் ஆகும் என்பதால் இது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். யூனியன் […]
Continue reading …