உலக இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலங்கெங்கும் எடுத்துச் செல்லும் அறிவுப் பண்டமாற்று என்பது பெரும்பணி – அரும்பணி. அத்தகைய அரும்பணியில், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, வங்கத்துக் கவிஞர் தாகூரின் புதினத்தைத் தமிழில் வடித்துள்ள முனைவர் கா.செல்லப்பன், உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்துள்ள இராகவன், கவிஞர் சல்மா அவர்களின் இரண்டாம் ஜாமங்களின் கதை புதினத்தை மராத்தியில் மொழிபெயர்த்துள்ள சோனாலி நவாங்குள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள் – பாராட்டுகள்.
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் 12-09-21 மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது, பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 12.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் […]
Continue reading …உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இந்திய கடலோர காவல் படை கப்பலான விக்ரஹாவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், தற்சார்பு இந்தியாவை நோக்கிய முக்கிய நடவடிக்கைகளில் இது ஒன்று என்றும், புதிய கப்பல் வடிவமைப்பு முதல் கட்டமைப்பு வரை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதென்றும் கூறினார். இந்திய ராணுவ வரலாற்றில் முதன் முறையாக ஒன்று அல்லது இரண்டு கப்பல்களுக்காக அல்லாமல், 7 கப்பல்களுக்கான ஒப்பந்தம் தனியார் துறை நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ளது. […]
Continue reading …கல்விக்கட்டணம் செலுத்த இயலாமல் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிற மாணவர்களுக்கு உயர்கல்வி கொடுப்பது அரசின் கடமை. அதற்கான முறையில் கல்விக்கடன் திட்டத்தை உருவாக்கி அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டியது அதன் படிநிலைகளுள் முதலானது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்கப்படும் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் கல்விக் கனவுகளை பாதித்துள்ளது. எனவே இது குறித்து மதுரை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை […]
Continue reading …தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய்த்தொற்றுப் பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று (21.08.2021) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. […]
Continue reading …தமிழ்நாட்டில் மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உயர்த்துவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கூறியிருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்த நினைப்பது நியாயமற்றது. சென்னையில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நிதித்துறை செயலாளர், தமிழ்நாடு அரசின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளார். நிலைமையை சமாளிக்க […]
Continue reading …நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை! – சீமான் கோரிக்கை கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள முரண்கள் தொடர்பாக நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களிடம் எழுந்திருக்கும் மோதல் போக்கும், நிகழ்ந்தேறிய வன்முறையும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு மீன்வளச் சட்ட வரைவை அவசரகதியில் நிறைவேற்றத்துடிக்கும் இக்கொடுஞ்சூழலில், அதற்கெதிராக மீனவ மக்கள் ஓரணியில் திரள வேண்டிய தேவையிருக்கையில், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பில் உள்ள […]
Continue reading …நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போலத் தயாரிக்கப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள இயற்கை சார்ந்த முன்னெடுப்புகளையும், வேளாண்மை சார்ந்த திட்டங்களையும் வெறுமனே வெளித்தோற்ற அரசியலுக்காகப் பயன்படுத்தாது உளப்பூர்வமாகச் செயலாக்கத்திற்குக் கொண்டுவர உழைக்க வேண்டும்! – சீமான் அறிவுறுத்தல் தமிழகத்தில் முதன்முறையாக வேளாண்துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டிருப்பதை உளப்பூர்வமாக ஏற்று வரவேற்கிறேன். வேளாண்மைக்கு முன்னுரிமை தர வேண்டுமென்பதை வலியுறுத்தி, அதற்கெனத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கருத்தாக்கத்தை நாம் தமிழர் […]
Continue reading …“உழுது உண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுது உண்டு பின்செல் பவர்” அதாவது, உழவுத் தொழிலைச் செய்து அதனால் விளையும் பொருளை உண்டு உயிர் வாழ்கிறவர்களே வாழ்பவர்கள். மற்றவர்கள் எல்லாம் பிறரை வணங்கி அவர் கொடுப்பதை உண்டு ஏவல் செய்து பிழைக்கும் அடிமைகள் ஆவார்கள் என்பது திருவள்ளுவரின் வாக்கு. அதன் அடிப்படையில் வேளாண்மையும், அதன் முக்கியத்துவத்தையும் நன்கு உணர்ந்து, தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
Continue reading …காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள 15 சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.13.50 கோடி மதிப்பீட்டில் 3,04,627 மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அன்று (14.08.2021) மரக்கன்றுகளை நட்டுவைத்து தொடங்கி வைத்தார். தொழில்துறையில் இந்திய துணைக்கண்டத்திலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வையுடன், 1971 ஆம் ஆண்டிலேயே, அயராது உழைத்து தொழிற்பூங்காவின் உருவாக்கத்திற்கு தொடக்கப்புள்ளி வைத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் ஆவார். அன்று கலைஞர் தொடங்கிய தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) […]
Continue reading …