*தமிழகத்தில் முதல்வர்* *மு.க.ஸ்டாலின் தலைமையிலான* *இந்தியா கூட்டணிக்கு*  *பாரத முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு*

Filed under: அரசியல் |

 

*தமிழகத்தில் முதல்வர்* *மு.க.ஸ்டாலின் தலைமையிலான* *இந்தியா கூட்டணிக்கு*  *பாரத முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு*

திராவிட முன்னேற்றக் கழக தலைவரும்,தமிழக முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது* ;

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நல்லாட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிக்கொண்டிருகிறார். சொன்னதை செய்யும்  முதல்வரான  மு.க.ஸ்டாலின்  2021 ல் நடந்த சட்டமன்ற தேர்தலுக்காக அறிவித்த வாக்குறுதிகளான …..

குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ₹ 1000 வழங்கும் திட்டம்

மகளிர் ,திருநங்கைகள்,மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல்  இலவச பேருந்து திட்டம்

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ₹1000 வழங்கும் புதுமை பெண் திட்டம்,காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும்,

இரண்டரை ஆண்டு ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றி தேசத்தின் முன்னோடி முதல்வராக திகழ்கின்றார்.

இதுமிகையல்ல

இதனிடையே யாதவ சமுதாயத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றெண்ணிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது அமைச்சரவையில் எங்கள் சமூகத்தினை சேர்ந்த ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன், கே.ஆர். பெரியகருப்பன் போன்றோரை அமரவைத்து அழகு பார்த்துள்ளார்

மேலும் மூன்று மாநகராட்சி துணை மேயர்களாக  சென்னை சைதை மகேஷ் குமார்,திருச்சி திவ்யா தனக்கோடி,நெல்லை கே.ஆர்.ராஜூ ஆகியோரை நியமித்து யாதவ சமுதாயத்திற்கு உரிய  பிரதிநித்துவமும் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிகளிலும் வெற்றி தோல்வியை நிர்ணையிக்க கூடிய அளவில் சுமார் 2.00.000 யாதவ வாக்காளர்கள் உள்ளனர் என்பதனை  முதல்வர் நன்கு அறிவார்கள்

இருப்பினும்

பெரும்பான்மை மக்களாக இருந்தும், அரசியலில் பலமில்லாதால்  நிர்வாகத்துறை,நீதித்துறை,காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் யாதவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கப்பட வில்லை.

இதற்காகவே 2011 ல் துவக்கப்பட்ட யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழகம் தொடர்ந்து  போராடி வருகின்றது.

இந்நிலையில் யாதவ சமுதாய மக்களளின் எதிர்கால நலன் கருதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே……

கால்நடை வளர்ப்போர் நலவாரியம் அமைத்து தரவும் ,அதற்கு யாதவ  சமுதாயத்தினை சேர்ந்த ஒருவரையே தலைவராக அமர்த்திடவும்,

ஆவின் சேர்மன் பதவிகள் மற்றும் கோயில்  அறங்காவலர் குழு தலைவர் பதவிகளில், யாதவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கிடவும், தொடர்ந்து வரவிருக்கின்ற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் யாதவ சமுதாயத்துக்கான பிரதிநித்துவத்தினை உயர்த்தி வழங்கிட முடியும்  என்ற நம்பிக்கை எங்களிடம் அசைக்க முடியாத வகையில் வேரூன்றி விட்டது.

அதனடிப்படையில்  எங்களது உயர்நிலை செயல் திட்ட குழு எடுத்த முடிவின் படி யாதவர்களுக்கான அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலையினான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பது என முடிவெடுத்து உள்ளோம்.

ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிகளிலும்  வெற்றியை நிர்ணயிக்கு கூடிய யாதவ வாக்காளர்களிடம்  திராவிட  முன்னேற்றக் கழக அரசு எங்கள் சமுதாயத்துக்கு செய்த விசயங்களை எடுத்துரைத்து வாக்குகளை பெறுவோம்.

மேலும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேரு,திருச்சி வேட்பாளர்  துரை வைகோ,தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி. தஞ்சாவூர்  வேட்பாளர் முரசொலி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் 40 தொகுதி வேட்பாளர்களின் வெற்றிக்கு முழு வீச்சில் பாடுபட்டு வெற்றிகனியை முதலமைச்சரிடம் ஒப்படைக்க  அணில் போல பாடுபடுவோம் என உறுதியளிக்கின்றோம். என்று அறிக்கையில் கூறியுள்ளார்.