3000 டாஸ்மாக் கடைகளுக்கு சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசு அனுமதி!

Filed under: தமிழகம் |

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஒரு டாஸ்மாக் கடைக்கு இரண்டு சிசிடிவி கேமராக்கள் என்ற கணக்கில் 3ஆயிரம் டாஸ்மாக் கடைகளுக்கு 6 ஆயிரம் சிசிடிவி கேமராக்களை பொருத்தப்படுகின்றன.

மண்டல வாரியாக எந்த கடைக்கு கேமராக்கள் பொருத்தலாம் என்ற அறிக்கையை மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதில் எந்த கடையில் மது அதிகமாக விற்பனை, திருட்டு சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு, பிரச்சினை நடக்கிற கடைகளுக்கு கேமராக்களை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 535 கடை, கோயம்புத்தூரில் 450 கடை மற்றும் மதுரை மண்டலத்தில் 755 கடைகளுக்கு சிசிடிவி கேமராக்களை பொருத்தப்பட உள்ளது.