அய்யா வைகுண்டரின் 192 அவதார மாசி மகா ஊர்வலம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்று வருகிறது.

Filed under: தமிழகம் |

அய்யா வைகுண்டரின் 192 அவதார மாசி மகா ஊர்வலம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் அய்யாவின் சப்பரப்பவணி தொடங்கி அம்பை பூக்கடை பஜார், அகஸ்தியர் கோவில், வண்டிமறிச்சி அம்மன் கோவில், ராணிஸ் ஸ்கூல் வழியாக வாகைக்குளம் (வாகைபதி) அய்யா ஶ்ரீமன் நாராயண சுவாமி
கோவில் வந்தடையும்
வாகைபதிக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

இந்த சப்பர பவனியில் நெல்லை மாவட்டம், அம்பை தாலூவில் உள்ள சுமார் 40 ஊர் பதிகளின் சப்ரம் கலந்து கொண்டது

ஒவ்வொரு சப்பரத்திலும் அய்யா அனுமன், கருடன், தண்டியல், நாகம், அன்னப்பச்சி , சிம்மம் போன்ற வாகத்தில் பவனியாக வந்து பக்த கோடிகளுக்கு காட்சியளித்து அருள் ஆசி வழங்கினார்.

சப்பரத்தின் முன்பாக சிறுவர் சிறுமியர் கோலாட்டு அடித்தும் மேலும் செண்டை மேளம் , சிங்காரி மேளம், நையாண்டி ராஜமேளம் அடித்து வந்தனர்
ஆங்காங்கே நீர்மோர் பந்தல் அமைத்து பக்த்தர்களுக்கு தாகம் தனித்தனர்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும்
அய்யாவின் அன்பு கோடி மக்கள் செய்து வருகின்றனர்

அம்பை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.