இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தென்மேற்கு பருவமழையை விட ஆறு சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, “கடந்த 24 மணி நேரத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூர் பகுதியில் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழை தென்மேற்கு பருவமழை இயல்பை விட ஆறு சதவீதம் அதிகம் பெய்துள்ளது. மேலும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது மழை பெய்துள்ளதை அடுத்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை மாறி உள்ளது.
Related posts:
மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் ஆழ்ந்த இரங்கல்!
தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!
கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் வெள்ளம்: அமைச்சர் செந்தில்பாலாஜி 4 மணி நேரம் ஆய்வு
மறுபடியும் கேட்கிறேன்... மதுக்கடைகளை திறக்காதீர்... நிரந்தரமாக மூடுங்கள் - மருத்துவர் இராமதாசு!



