முக்கியத் தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் காண்பதே தொண்டர்களின் விருப்பம்.

Filed under: தமிழகம் |

முக்கியத் தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் காண்பதே தொண்டர்களின் விருப்பம்.

துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி திருச்சியில் பேட்டி.

திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் தொடர்பாக, அங்கு நடைபெற்று வரும் பணிகளை அ.தி.மு.க. துணை பொது செயலாளர். கே.பி.முனுசாமி, அமைப்பு செயலாளர் பி.தங்கமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். இதில் மாவட்ட செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி , ஜெ.சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, பூனாட்சி, அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன்.செல்வராஜ்,
மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் அரவிந்தன், ஜோதி வாணன்,சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் என்ஜினீயர் இப்ராம்ஷா,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி,ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,
மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன்,எம் ஜி..ஆர் மன்ற மாவட்ட செயலாளர் கலிலுல் ரகுமான், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ஞானசேகர்,வர்த்தக பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் டிபன்கடை கார்த்திகேயன்,
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் தேவா,பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,சுரேஷ் குப்தா,நாகநாதர் பாண்டி, ரோஜர் ,வட்டச் செயலாளர்கள் இன்ஜினியர் ராஜா, வசந்தம் செல்வமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

வேட்பாளர் அறிமுக பொதுக்கூடம்

பொதுக்கூட்ட மேடை மற்றும் திடல் அமைக்கும் பணிகளை பார்வையிட்ட அவர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது :-
திருச்சி வண்ணாங்கோயில் பகுதியில் மார்ச் 24-ந் தேதி நடைபெறும் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். கோவையில் நடந்த பிரதமர் “ரோடு ஷோ” நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கொண்டது குறித்து, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி மேடைகள் தோறும் புகழ்ந்து பேசி வருகிறார். ஆனால் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா உள்ளிட்டோரை அவதூறாக பேசி வருவதை பிரதமர் ஏன் கண்டிக்கவில்லை ?
தமிழகத்தில் முக்கிய தொகுதிகளை கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்காமல், அதிமுக நேரடியாக களம் காண வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர். இருப்பினும் கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. மத்திய அரசின் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் தேர்தல் இது. மேலும் தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறியும், தமிழக மக்களின் ஜீவதார பிரச்னைகளுக்கு குரல் கொடுத்தும் வாக்குகள் சேகரிப்போம். பா.ம.க. தற்போது பாஜவுடன் வைத்துள்ளது. அதற்கான பலனை அனுபவிப்பர். அதிமுக பலமுறை கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது. வரலாறும் அதுதான்.
அதிமுகவால் அறிமுகப்படுத்தப்பட்டவன் நான், ஜெயலலிதாதான் எனது தெய்வம், எந்த காலத்திலும் அதிமுக}வுக்கு எதிரான நிலைப்பாடை எடுக்க மாட்டேன் என கூறி வந்த ஓபிஎஸ் தற்போது இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றதும், சின்னத்தை முடக்குங்கள் எனக்கூறுகிறார். இதிலிருந்து அவர் எத்தனை பெரிய சுயநலவாதி என்பது தெரிகிறது. தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த அதிமுக அசைக்க முடியாத பலம் கொண்டது. இது தேர்தல் முடிவில் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்இவ்வாறு அவர் கூறினார்.