பாட்டாளி மக்கள் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி விடுதியில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா மற்றும் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்.