பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இல்லத் திருமண விழா!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், திருமதி சரஸ்வதி அம்மையார் ஆகியோரின் பெயர்த்தியும், முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், சௌமியா அன்புமணி ஆகியோரின் மகளுமான சங்கமித்ரா சௌமியா அன்புமணி – சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன், கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜி இணையரின் திருமணத்தை மருத்துவர் இராமதாஸ் சென்னையில் இன்று நடத்தி வைத்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மு. கிருஷ்ணசாமி, பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மற்றும் மணமகள் – மணமகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடன் உள்ளனர்.