துவாக்குடி பகுதியில் 2-வது சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்டச் செயலாளர் ப.குமார் பேச்சு.

Filed under: தமிழகம் |

திருச்சி துவாக்குடி பகுதியில் 2-வது சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்டச் செயலாளர் ப.குமார் பேச்சு.

திருச்சி, துவாக்குடி வட்டச்சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் இரண்டாவது சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தஞ்சை சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடிக்கு மிக அருகாமையில் (2 கி.மீ. தொலைவில்) அமைக்கப்பட்டுள்ள இதனை அகற்ற வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் திருச்சி புகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை வகித்து மாவட்டச் செயலாளர் ப.குமார் பேசியதாவது,
மத்திய, மாநில அரசுகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் கடமை என்பதை அதிமுக செயல்படுத் வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிமுறையின்படி 60 கி.மீ தொலைவுக்கு பின்னரே மற்றொரு சுங்கச்சாவடி அமைக்க வேண்டும். ஆனால், விதுமுறைக்குப் புறம்பாக, 2 கி.மீ., இடைவெளியிலேயே அடுத்த சுங்கச்சாவடி துவாக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது. இது மக்களிடம் கூடுதல் வரி வசூலிக்கும் திட்டமாகும். ஒரேயொரு டோல்பிளாசா தான் இங்கே இயங்க வேண்டும். எனவே புதிதாக அமைக்கப்பட்டதை அகற்ற வேண்டும். மத்திய மாநிலஅரசுகள் இணைந்துதான் இத்திட்டத்தை நிறைவேற்றுகின்றன.
திமுக அரசை மாற்றக்கூடிய மாற்று அரசாக அதிமுக அமையும். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். வாக்களித்து வெற்றியடையச் செய்த மக்கள்மீது அக்கறையிருந்தால் இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் பேசியதாவது,
தமிழகத்தில் இப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தினாலும் அதிமுக வெற்றி பெற்று முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி வருவார். உண்மையான மக்களாட்சியைத் தருவார். திருச்சி தொகுதி எம்பியைக் கண்டா வரச் சொல்லுங்க என்பது போல உள்ளது அவர் நிலை. 60 கி.மீ., தூரத்தில்தான் அடுத்த சுங்கச்சாவடி அமைக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியதுக்கு எதிராக துவாக்குடி பகுதியில் 2 ஆவது சுங்கச்சாவடி அமைக்கப்படுகிறது. அதை உடனே அகற்ற வேண்டும். தாலிக்கு தங்கம், மினி கிளினிக், மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட அதிமுக அரசின் மக்கள் நலன் திட்டங்களைப் பறித்து வருகிறது திமுக அரசு. அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன என்றார்.
நிகழ்வில் எஸ்டிபிஐ மாநில நிர்வாகி அசன்பைஜி, அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் லால்குடி பாலன், மணப்பாறை சின்னசாமி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் சூரியூர் ராஜாமணிகண்டன், சண்முகபிரபாகரன், கும்பக்குடி முருகானந்தம், சாருமதி, தீன், ஜெயராமன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் ராவணன் வரவேற்றார். கார்த்திக் நன்றி கூறினார்.