*திண்டுக்கல் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 6 வாலிபர்கள் கைது*,

Filed under: தமிழகம் |

*திண்டுக்கல் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 6 வாலிபர்கள் கைது*,

திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி.சுந்தரபாண்டியன் மேற்பார்வையில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் திண்டுக்கல் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல் பாறை மேட்டு தெருவை சேர்ந்த சுப்பிரமணி(48) மதுபாலன்(31), நாகல் நகர் மதன்குமார்(31), ரவுண்ட் ரோடு விநாயகர் கோவில் தெரு தாமரைக்கண்ணன்(22), வேடப்பட்டி மாதவன்(23), சிறுமலை ராஜா(24) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சா, ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.