தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்ப 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசியமான பொருள்களை தரமான எடையாகவும் பொட்டலமாகவும், வழங்கிட வேண்டும் என்றும் , சரியான எடையில் அத்தியாவசியமான பொருட்களை இறக்காமல் அபராதம் விதிக்கும் சுற்றறிக்கையை நிறுத்தப்பட வேண்டும் என்றும், அத்தியாவசியமான பொருட்களை ஏற்றி வரும் லாரிகளில் எடை தராசு வைத்துக்கொண்டு சரியான எடை உள்ள பொருட்களை இறக்க வேண்டும் என்றும், நியாய விலை கடைகளில் பொருட்களை இறக்குவதற்கு இறக்கு கூலி கட்டாயமாக வசூலிப்பதை தடுக்க வேண்டும், விளிம்பு தொகையை ரூபாய் 107 ரூபாயாக உயர்த்திய பின்பும் கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டும் என்றும், மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் ஒரு குவிண்டாலுக்கு இறக்கு கூலித் தொகை வரைமுறையினை பதிவாளர் அவர்களே நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், இருப்பு அதிகமாக இருந்தால் அபராதம் விதிப்பதை கைவிட்டு பழைய நடைமுறையை பின்பற்றி இருப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அஞ்சு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில பொருளாளர் தலைமையிலும், மாவட்ட தலைவர் மகாலிங்கம் முன்னிலையிலும் நடந்த் இந்த ஆர்ப்பாட்டத்தில் பண்ணீர் செல்லம் அழகர்சாமி , அய்யனர் , பாண்டி , ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர்சிறப்புரை நிகழ்த்தினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண் பெண் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.