இந்திய அணியில் ரோகித் சர்மாவும் மற்றும் ஷிகர் தவானும் சிறந்த துவக்க ஜோடி என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் துவக்க வீரர்களாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒருநாள் போட்டியில் இணைந்து தங்களுடைய பார்ட்னர்ஷிப்பில் 16 முறை சதம் அடித்துள்ளனர்.
இதனை பற்றி இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கூறியதாவது: ஷிகர் தவான் எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் ஆரம்பத்தில் ரன்களை நடிப்பார். இவர் ரன் சேர்ப்பதால் மறுமுனையில் ரோகித் சர்மா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவகாசம் எடுத்து கொள்வர். ஆனால், ரோஹித் சர்மா நிலைத்து நின்று விட்டால் அவர் சதம் அடிப்பது யாராலும் தடுக்க முடியாது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
இவர்கள் இருவரும் சிறப்பாக புரிந்துகொண்டுள்ளனர். ரோகித் சர்மா கால அவகாசம் எடுத்து கொள்வர் என்பதை தவான் நன்றாக அறிந்து வைத்துள்ளார். இவர்கள் இருவரும் நன்றாக புரிந்து கொண்டு விளையாடுவதால் தான் இந்திய அணியின் சிறப்பான ஜோடியாக உள்ளனர். இந்திய அணி வெற்றிக்கு இது காரணமாக உள்ளது.
இவ்வாறு இர்பான் பதான் கூறியுள்ளார்.