எனக்கு பிடித்து நான் ரசிக்கும் இரு பேட்ஸ்மேன்கள் – இந்தியா பேட்ஸ்மேன் ரோகித் சர்மா!

Filed under: விளையாட்டு |

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து எந்த ஒரு கிரிக்கெட் போட்டி நடக்கவில்லை. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இவர்கள் தங்களின் பொழுதுபோக்கை சமூக வளையத்தளம் மூலம் கழிக்கின்றனர்.

தற்போது இந்தியா கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் ரசிகர் இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை அல்லது ஐ.பி.எல் போட்டி இரண்டில் எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என்று கேட்டத்துக்கு இரண்டுக்கும் முன்னுரிமை கொடுப்பேன் என பதில் அளித்துள்ளார்.

பின்னர் தற்போது இருக்கும் பேட்ஸ்மேன்களில் யாருடைய ஆட்டத்தை நீங்கள் ரசிப்பீர்கள் என்று கேட்டத்துக்கு இங்கிலாந்து அணியின் ஜாசன் ராய் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவன் சுமித் என தெரிவித்துள்ளார்.

மேலும், எம்.எஸ் டோனியை பற்றி ஒரு வார்த்தை என்று கேட்டத்துக்கு அவர் ஒரு ஜாம்பவான் பதில் அளித்துள்ளார் ரோஹித் சர்மா.