நெல்லை மண்டல கிறிஸ்தவ போதகர் மாநாடு அரசியலமைப்பு சட்ட உரிமை பாதுகாப்பு மாநாடு

Filed under: தமிழகம் |

திருச்சி ஐசிஎப் பேராயம் ஜேகேசி நிறுவனம் சார்பில் நெல்லை மண்டல கிறிஸ்தவ போதகர் மாநாடு அரசியலமைப்பு சட்ட உரிமை பாதுகாப்பு மாநாடு நெல்லை மாவட்டம் பாபநாசம் சிவந்திபுரம் காமராஜ் மஹாலில் ஜேகேசி நிறுவனர் ஐசிஎப் பேராயர் தலைவர் முனைவர் பா ஜான் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

ஐசிஎப் நெல்லை மண்டல பேராயத் தலைவர் போதகர் ஜெ.சாமுவேல் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். ஐசிஎப் தென்காசி மண்டல பேராயத் தலைவர் போதகர் டேனியல் ராஜா, பாஸ்டர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மாநில பேராய கவுன்சில் தலைவர் பேராயர் சென்னை டாக்டர் எம் எஸ் மார்ட்டின் அவர்களும், நெல்லை தூத்துக்குடி திருமண்டலம் சாத்தான்குளம் சேகரம் ஆயர் சபை மன்ற தலைவர் சி எஸ் ஐ ரெவரண்டு பி டேவிட் ஞானையா, அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இசக்கி சுப்பையா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி பி ரமேஷ், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே எஸ் சுப்பையா பாண்டியன், கன்னியாகுமரி மாவட்ட போதகர் மரிய ஸ்டீபன், அம்பாசமுத்திரம் பாஸ்டர் ஆர் அலெக்ஸ் சுந்தர்ராஜ், அகஸ்தியப்பட்டி நெல்லை போதகர் பிரேம்குமார், மாநிலச் செயலாளர் திருச்சி ஐ சி எப் பாஸ்டர் ஏ ராஜன், பாஸ்டர் மோகன், மதுரை போதகர். பெ. பெவிஸ்டன் ஆகியோர் வாழ்த்துரை மற்றும் கருத்துரை வழங்கினார்கள்.

இந்த மாநாடு நோக்கம் நெல்லை மண்டலத்தில் இருக்கக்கூடிய அனைத்து போதகர் உடைய ஆலய வழிபாட்டுக்கு உரிய பாதுகாப்புகோரியும், அதேபோல ஆலயங்கள் திருச்சபைகள் கட்டுவதற்கு அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட போதகர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.