சிறுபான்மை மக்களின் தேவைகளை புரிந்து மு. க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க கூட்டத்தில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.பேச்சு.
j
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க திருச்சி கிழக்கு மாவட்ட ஆய்வுக்கூட்டம் அவைத்தலைவர் ஜேக்கப் தலைமையில் ஜென்னி பிளாசாவில் நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவனத் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார். சிறுபான்மை மக்களின் தேவைகளுக்காக
சட்டமன்றத்தில் பேச நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறேன். கிறிஸ்துவ மற்றும் சிறுபான்மை மக்களின் தேவைகளை புரிந்து அதை நிறைவேற்றி வருகின்ற முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மாநில பொது செயலாளர் போதகர் பால்தயாநிதி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேஷன், மத்திய மண்டல செயலாளர் அடைக்கலராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இக்கூட்டத்திற்கு அருட்பணி விஜய் பெலவேந்திரன், மாநில ஆர்.சி. துணை அமைப்பாளர் வின்சென்ட், மாவட்ட பொருளாளர் ஞானபிரகாசம், மாவட்ட செய்தி தொடர்பாளர் தன்ராஜ், மாவட்ட துணை அவைத்தலைவர்கள்
ஏனோக், வாசுகிஅமலா, ஸ்டீபன், மாவட்ட துணை செயலாளர் செல்வி, டி.இ.எல்.சி மாவட்ட பொறுப்பாளர் ஜோஸ்வா ஜெயக்குமார், சி.எஸ்.ஐ மாவட்ட பொறுப்பாளர் தேவதாஸ் சாமுவேல்,பி.சி.மாவட்டபொறுப்பாளர் பொன்பிரிட்டோ, தொகுதி செயலாளர்கள் கிழக்கு கனகராஜ், மேற்கு ஜேம்ஸ், மணப்பாறை மைக்கேல் ஆல்பர்ட்,
மாவட்ட நிர்வாகிகள் ஸ்டீபன்ராஜ், ஆரோக்யசேசுஅந்தோணி,
மகளிர் அணி பொறுப்பாளர்கள்,பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள்
மற்றும் இயக்க சொந்தங்கள் 200 பேர் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட செயலாளர் இ.புஷ்பராஜ் செய்திருந்தார்.