ஆண்டி முத்து ராசாவுக்காக, மூன்று ராஜாக்களை மூன்று தொகுதிகளில் களம் இறக்கும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம்.
வருகின்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி மூன்று இடத்தில் போட்டியிடுகிறது வெள்ளாளர் முன்னேற்ற கழகம். முதலாவதாக திருநெல்வேலி வேட்பாளர் புல்லட் ராஜாவும், இரண்டாவது வேட்பாளராக தேனி மக்களவைத் தொகுதியில் பந்தல் ராஜாவும், மூன்றாவதாக தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் M.N.B.ராஜாவும் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இத்தனை வேட்பாளர்கள் நிற்பதற்கு காரணம் ஆண்டிமுத்து ராஜா தான் என்கிறார்கள் வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள்.