அவர்களிடம் இருப்பது பணபலம், நம் கூட்டணியில் இருப்பது மக்கள் பலம் :மண்ணின் மைந்தன் சந்திரமோகனை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.
பெரம்பலூர் பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு.
பெரம்பலூர் சங்கு பிரிவு அருகே பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
எடப்பாடியார் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மக்கள் கூட்டணி, தொண்டர்கள் விரும்பிய கூட்டணி, விஜயகாந்த், ஆசிபெற்ற கூட்டணி. பெரம்பலூர் வேட்பாளராக களம் காணும் இந்த மண்ணின் மைந்தன் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். ஒருவர் எம்.பி. ஆன கல்வியாளர் மற்றொருவர் அமைச்சரின் மகன். அவர்களிடம் இருப்பது பணபலம், நம்மிடம் இருப்பது மக்கள் பலம்.
வெற்றி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற செய்யுங்கள்.
குடிநீருக்கும், விவசாயத்திற்கும் உங்கள் குரலாக ஒலிப்பார். பெரம்பலூரில சிறப்பு பொருளாதார மண்டலம், மருத்துவக் கல்லூரி, துறையூரில் வெங்காயம் விளைவதால் வெங்காய ஜுஸ் தயாரிக்கும் பேக்டரியையும், முசிறியில் பெண்களுக்கான கலைக் கல்லூரி, பாலிடெக்னிக், பஞ்சம்பட்டி ஏரியில் காவிரி நீர் கொண்டு வரவும், காவேரியில் தடுப்பணையும், இளைஞர்களுக்கு வேலைவாய்பை உருவாக்கி தருவார் என உறுதி அளிக்கிறேன்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை தருகிறேன் என்று மோடியும் சொன்னார். கொடுத்தாரா? இல்லை! பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து ஏமாற்றும் , மத்திய, மாநில அரசுகள் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் இந்த தேர்தலில் புகட்ட வேண்டும்.
காலையிலே சென்று உங்கள் வாக்கை போட்டுவிடுங்கள் இல்லை என்றால், கள்ள ஓட்டை போட்டு ஏமாற்றி விடுவார்கள். ஆட்சி பலம், அதிகார பலம் அவர்களிடம் இருக்கிறது. மக்கள் பலம் பெரியது என காட்ட வேண்டும்.
வெற்றி பெறுவதற்கு முன் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்த முதலமைச்சர், வெற்றி பெற்ற பின், தகுதியான மகளிருக்கு மட்டும் என அறிவித்துள்ளார். பொய் சொன்ன முதலமைச்சரை தகுதியில்லா முதலமைச்சர் என சொல்லலாமா என்றும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் பேசினார்.
பிரச்சாரத்தின் போது திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் அமைச்சருமான பரஞ்சோதி, முன்னாள் அமைச்சர் மோகன், பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் தமிழச்செல்வன், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், சசிக்குமார், நகர செயலாளர் ராஜபூபதி மற்றும் தேமுதிக மாவட்ட செயலாளர் தேமுதிக, புரட்சிபாரதம், எஸ்.டிபி.ஐ கட்சியினர் பலர் திரளாக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.