“அகண்டா” திரைப்படம் தமிழில் ரிலீஸ்!

Filed under: சினிமா |

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான திரைப்படம் “அகண்டா.”

 

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றது என்பதும் 60 கோடியில் தயாரான இந்த திரைப்படம் 150 கோடி வசூல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழில் டப் செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணி முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலகிருஷ்ணா ஜெகபதிபாபு ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.