இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் சிறப்பான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் “அந்தகாரம்”. இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரித்துள்ளார்.
இந்தப் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் இந்த மாதம் ரிலீசாகும் என கூறப்படுகிறது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விக்னேஷ் ராஜன் என்பவர் இயக்கி அந்தகாரம் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், பூஜா, குமார் நடராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.