மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ள “க/பெ ரணசிங்கம்” என்கிற படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் ஐந்து இந்திய மொழிலும் மற்றும் 10 சர்வதேச மொழிலும் சப்டைட்டிலுடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்த படத்தின் ஓடிடியில் ரிலீஸ் பற்றி முக்கியமான தகவலை தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில் இந்த படம் ஓடிடியில் மட்டும் இல்லாமல் டிடிஎச் தொழில்நுட்பத்திலும் வெளியாகும் எனவும் இந்த படம் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். இந்த படத்தை விருமாண்டி இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.