“அக்னி சிறகுகள்” டீசர் வெளியீடு!

Filed under: சினிமா |

“அக்னி சிறகுகள்” திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை “மூடர் கூடம்“ படத்தை இயக்கிய நவீன் இயக்குகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஷாலினி பாண்டே இப்போது படத்திலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் அவர் நடித்த காட்சிகளுக்குப் பதில் இப்போது அக்‌ஷரா ஹாசனை புக் செய்துள்ளனராம் படக்குழுவினர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் மே 27ம் தேதி வெளியிட உள்ளனர்.