அஜீத்தின் வீடியோ வைரல்!

Filed under: சினிமா |

அஜீத் பொருட்கள் வாங்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜீத் கடந்த சில நாட்களாக முன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். மேலும் பைக்கிலேயே அவர் பல நாடுகளுக்கு சென்று வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக வருகின்றன. தற்போது அஜீத் லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் செலுத்தும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில் வைரலாகி வருகிறது. ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு இன்னும் சில நாட்களில் அஜீத் நாடு திரும்ப இருக்கிறார். அதன் பிறகு அஜீத் 61 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.